இந்த இயற்கைப் பூங்கா புங்கனூர் ஏரி அருகே 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாறைகள் நிறைந்த இவ்விடத்தின் தன்மைக்கு ஏற்ற பல வகைத் தாவரங்கள் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன.
இந்தப் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. இங்கு குளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா, இசை நீருற்று , நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி, தோட்டம், மூங்கில் வீடு , கண்ணாடி வீடு ஆகியன உள்ளன. புங்கனூர் ஏரியின் அழகை ரசிக்கவும், ஓய்வுநேரத்தை போக்கவும் இந்தப் பூங்கா சிறப்பான இடம்.
கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ 15, சிறியவர்களுக்கு ரூ. 5 செலுத்த வேண்டும் இசை நீரூற்றைக் காண ரூ. 25 செலுத்த வேண்டும். காலை எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை பூங்கா திறந்திருக்கும்.



Click it and Unblock the Notifications