புங்கனூர் ஏரி, ஏலகிரி

புங்கனூர் ஏரி, ஏலகிரி சுற்றுலாத் தலத்தை மேலும் அழகுபடுத்தவும் , சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் செயற்கையாக அமைக்கப்பட்ட ஏரி. ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் இடம் இது தான்.

56.7 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி ஏலகிரியின் மத்தியில் அமைந்துள்ளது.ஏரியும் படகு சவாரி வசதியும் ஏலகிரி மலை முன்னேற்றம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தாரால் பராமரிக்கப் படுகிறது.

இந்த ஏரியில் படகு சவாரி மற்றும் படகு ஓட்டிச்செல்லும் வசதி உள்ளதால் இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஓய்வடுத்தவாறே மலைகளின் கண்கவர் அழகை ரசிக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை தருகிறது.

அருகில் ஒரு அழகான தோட்டம் உள்ளது. பயணிகள்  இங்கு  அமர்ந்து  ஏரியின்  அழகை  ரசிக்கலாம்.   இந்த தோட்டத்தில் குழந்தைகளுக்கான பூங்கா ஒன்றும் நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு திறந்த வெளி காணப்படுகிறது. பலவகைப் பறவைகள் இங்கு உணவுக்காக வந்தமர்வதைக் காண முடிகிறது.

Please Wait while comments are loading...