ஸ்ரீநகரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில், பட்காம் மாவட்டத்தில், அமைந்துள்ள ஒரு சிறு நகரமான யஸ்மார்க், அதன் அழகுக்கு மிகவும் பெயர் போனதாகும். இவ்விடம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7500 அடி உயரத்தில், பிர்பஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இயற்கை காதலர்களுக்கு பூரணமான சுற்றுலாத்தலமாக உள்ள யஸ்மார்க், உல்லாசப் பயணிகளுக்கு, பள்ளத்தாக்குகள், மலைமுகடுகள், மற்றும் புல்வெளிகளின், அகல விரிந்த கண் கொள்ளாக் காட்சிகளை விருந்தாக்குகிறது.
இங்கு வருவோர், மலையேற்றம், பனிச்சறுக்கு, மற்றும் குதிரையேற்றம் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றனர். இங்கிருந்து, சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நீல்நாக், மலையேற்றத்துக்கான தொடக்கப் புள்ளியாய்த் திகழ்கிறது.
நீல்நாக் ஏரி, தத்தாகுதி மலை, மற்றும் சாங்-இ-சஃபேத் ஆகியவை யஸ்மார்க்கின் சில பிரபலமான சுற்றுலா ஈர்ப்புகள். அதன் அழகிய நீல நிற தண்ணீருக்காக பெரிதும் பேசப்படுகின்ற நீல்நாக் ஏரி, அருமையான ஒரு உல்லாச பயணத்தை அளிக்கவல்லதாகவும் கருதப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 15500 அடியில் அமைந்துள்ள தத்தாகுதி மலையை, யஸ்மார்க்கிலிருந்து கால்நடை மூலமாகவோ அல்லது குதிரைச் சவாரி மூலமாகவோ அடையலாம்.
முட்டை வடிவில் அமைந்துள்ள புல்வெளியான, சாங்-இ-ஸஃபேத், உல்லாசப் பயணங்களுக்கு பொருத்தமான ஒரு ஸ்தலமாகும். இதற்குச் செல்லும் வழியில், பயணிகள், ஹாய்கின் மற்றும் லிட்டர்மர் புல்வெளிகளின் அழகையும் ரசித்துக் கொண்டே செல்லலாம்.
யஸ்மார்க்கை, வான், இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம் எளிதாக அடையலாம். முக்கிய நகரங்களான ஷிம்லா, சண்டிகர், மும்பை மற்றும் டெல்லி ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள ஸ்ரீநகர் விமான நிலையம், டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையம், மற்றும் ஜம்முதாவி இரயில் நிலையம் ஆகியவை யஸ்மார்க்குக்கு அருகாமையில் உள்ளன. யஸ்மார்க செல்ல, வழக்கமான மற்றும் நேரடி பேருந்துகள், ஸ்ரீநகரிலிருந்து ஏராளமாக உள்ளன.
யஸ்மார்க் பகுதி, துணை வெப்ப மண்டல வானிலையை கொண்டுள்ளது. இப்பகுதியில், கோடைகள் இதமாகவும்; குளிர்காலங்கள் குளிரோடும், மிதமான பனிப்பொழிவோடும் காணப்படுகின்றன.
மே முதல் ஆகஸ்ட் வரை நீடிக்கும் கோடைகாலமும், அக்டோபர் முதல் மார்ச் வரை நீடிக்கும் குளிர்காலமும், இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டங்கள் ஆகும்.



Click it and Unblock the Notifications