Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிதம்பரம் » ஈர்க்கும் இடங்கள் » திருவேட்களம்

திருவேட்களம், சிதம்பரம்

20

திருவேட்களம் என்ற இந்த புராணிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலம் சிதம்பரத்திற்கு அருகில் 3 கி.மீ தூரத்தில் அண்ணாமலைநகரை ஒட்டியே அமைந்துள்ளது. புராணிக கதைகளின்படி சிவபெருமான் வேடுவ வேடத்தில் அர்ஜுனனுடன் இந்த இடத்தில் போர்புரிந்ததாக சொல்லப்படுகிறது.

அதில் சிவனிடம் தோற்ற அர்ஜுனனின் வில் முறிந்துவிட்டதாக ஐதீகம். மற்றொரு கதையின்படி இந்த திருவேட்களம் பாசுபதேஸ்வரர் அமைந்திருக்கும் ஸ்தலத்தில்தான் அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றதாக சொல்லப்படுகிறது.

திருவேட்களம் கோயிலில் சிவபெருமான் பாசுபதேஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுந்தரேஷ்வரர், சித்தி விநாயகர், சோமாஸ்கந்தர் மற்றும் மஹாலட்சுமி ஆகிய தெய்வங்களின் சன்னதிகளும் இக்கோயிலின் பிரகாரப்பாதையில் இடம் பெற்றுள்ளன.

வைகாசி மாதத்தின்போது இந்த கோயிலில் திருவிழா ஒன்றும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறும் நிகழ்வு அச்சமயம் சடங்காக நடத்தப்படுகிறது.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
14 Aug,Fri
Return On
15 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
14 Aug,Fri
Check Out
15 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
14 Aug,Fri
Return On
15 Aug,Sat