Want to share your reaction with friends?
திருநாவாயா கோயில், மலப்புரம்
கேரளாவின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான திருநாவாயா கோயில், பாரதப்புழா நதிக்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில், திருநாவாயா நவ முகுந்த ஷேத்ரம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது.
திருநாவாயா கோயிலின் முதன்மை தெய்வமான விஷ்ணு பகவான், நவ முகுந்தன் என்ற வடிவத்தில் பக்தர்களால் வழிபடப்படுகிறது. அதோடு இந்த கோயில் வளகாத்தில் லக்ஷ்மி மற்றும் விநாயகர் சன்னதிகளும் இருக்கின்றன.
இந்தக் கோயில் முந்தைய காலங்களில் வேதம் பயிற்றுவிக்கும் ஸ்தலமாக திகழ்ந்து வந்தது. அதன் பிறகு மைசூர் பேரரசு இந்தப் பகுதிகளில் படையெடுத்து வந்தபோது திப்பு சுல்தான் ராணுவத்தால் இந்தக் கோயில் சூறையாடப்பட்டதுடன், இடித்துத் தகர்க்கப்பட்டது. எனினும் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயில் இன்றளவும் புகழ் குன்றாமல் இருந்து வருகிறது.
திருநாவாயா கோயில் திரூர் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில், மாமாங்கம் திருவிழாவுக்காக பிரசித்திபெற்ற திருநாவாயா எனும் சிறிய கிராமத்தில் அமைந்திருக்கிறது. எனவே இந்த கோயிலை சாலை மூலமாக அடைவது கடினமான காரியமாக இருக்காது.

