கதம் அணைத்திட்டம் என்று அழைக்கப்படும் இந்த கதம் அணையானது கோதாவரி ஆற்றின் துணை ஆறான கடம் ஆற்றின் மீது கட்டப்பட்டு ஆதிலாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதிலாபாத் நகரத்திற்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இந்த அணை கோதாவரி வடக்கு கால்வாய் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அணையின் கட்டுமான 1949ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1965ம் ஆண்டு முடிக்கப்பட்டுள்ளது. அதிலாபாத் மாவட்டத்திலுள்ள 25000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கு தேவையான நீர்ப்பாசன வசதியை தரும் விதத்தில் இந்த அணைத்திட்டம் உருவாகியுள்ளது.
தற்போது அதிலாபாத் நகரப்பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகவும் இந்த அணை மாறியுள்ளது. கோதாவரி ஆறு கிருஷ்ணா ஆற்றுடன் கூடும் முக்கியமான இடத்தில் இந்த அணை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
பசுமையான மரங்கள், புல்வெளிகள் மற்றும் சுத்தமான காற்று போன்ற இயற்கை அம்சங்கள் நிரம்பியிருப்பதால் இது ஒரு பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமாக மாறியுள்ளது. செகந்தராபாதிலிருந்து மன்மட் வரை செல்லும் மீட்டர் கேஜ் ரயில் மூலமாகவும் இந்த அணைப்பகுதிக்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications