செயிண்ட் ஜோசப் கதீட்ரல் எனப்படும் இந்த உலகப்புகழ்பெற்ற கிறித்துவ தேவாலயம் அதிலாபாத் நகரத்தில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களிலேயே மிகச்சிறந்த ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
ஆன்மீக முக்கியத்துவத்திற்காக மட்டுமல்லாது, நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகவும் பிரசித்தி பெற்றுள்ள இந்த தேவாயலத்தின் ஞாயிறு பிரார்த்தனைகளின்போது பல மதத்தினரும் கலந்துகொள்கின்றனர்.
இந்த தேவாலயத்தின் உள்ளே தெய்வீகம் கமழும் சாந்தமும் நிசப்தமும் குடிகொண்டுள்ளதால் பார்வையாளர்கள் ஒருவித மனச்சாந்தியை இங்கு உணர முடியும். இந்த தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தால் தெய்வீக அருளை உணர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
தேவாலயத்தை சுற்றிலும் பரந்து கிடக்கும் பசும் புல்வெளிகள் ஆலயத்தின் சூழலை இன்னும் மெருகூட்டுகின்றன. இந்த புல்வெளிகளில் அமர்ந்து பல பக்தர்கள் பைபிள் வாசித்துக்கொண்டிருப்பதை காணலாம். குறிப்பாக இந்த தேவாலய சூழலின் அமைதியை விரும்பி பல சுற்றுலாப்பயணிகள் இங்கு சிறிது நேரத்தை கழிப்பதை விரும்புகின்றனர்.



Click it and Unblock the Notifications