அடூர் நகரின் முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றான பாட்டுப்புரக்கல் தேவி கோயில் புகழ்பெற்ற பந்தளம் வல்லியகோயிக்கல் ஆலயத்துக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது.
இந்தக் கோயில் பார்வதியின் அவதாரமான பத்ரகாளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் வளாகத்தில் கருவறை மற்றும் பத்ரகாளியின் விக்ரகத்தை தவிர 250 மீட்டர் உயரம் கொண்ட கன்னிகா மண்டபம் ஒன்றும் இருக்கிறது.
பாட்டுப்புரக்கல் தேவி கோயில் மதுரை பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் அடூரில் உள்ள மற்ற ஆலயங்களை போலவே அடூரின் கலாச்சாரம் மற்றும் சமயச் சிறப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தக் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications