Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஜ்மீர் » ஈர்க்கும் இடங்கள் » நாசியான் கோயில்

நாசியான் கோயில், அஜ்மீர்

33

நாசியான் கோயில் அல்லது லால் மந்திர் (சிவப்பு கோயில்) என்று அழைக்கப்படும் இது 1865ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அஜ்மீரிலுள்ள பிரித்வி ராஜ் மார்க் எனும் இடத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. முதலாம் ஜைன தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கர்ப்பக்கிருக அமைப்பு இதன் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவில் ஆதிநாதர் சிலை மற்றும் வழிப்பாட்டுக்கூடமும் மற்றொரு பிரிவில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

இதில் உள்ள அருங்காட்சியகத்தின் சுவர்கள் தங்கத்தால் பூசப்பட்டுள்ளன. ஆதிநாதர் வாழ்க்கை வரலாறான பஞ்ச கல்யாணக் எனப்படும் ஐந்து காலகட்டங்கள் இந்த சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.3200 சதுர அடி பரப்பளவைக்கொண்டுள்ள இது பெல்ஜியம் வண்ணக்கண்ணாடிகள், தாதுவண்ண ஓவியங்கள் மற்றும் வண்ணக்கண்ணாடி வேலைகளைக்கொண்டுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாடுகளைக் கொண்டிருக்குமமொரு மைய மண்டபத்தைக்கொண்டுள்ள இந்தக்கோயில் தங்கக்கோயில் (ஸ்வர்ண மந்திர்) என்றும் அழைக்கப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட மர வேலைப்பாடுகள், கண்ணாடி வண்ண ஓவிய அலங்காரங்கள் போன்ற கலையம்சங்களை இந்த கோயிலில் காணலாம்.

விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றால் ஆன வேலைப்பாடுகளை கொண்டிருப்பதால் ‘சோனி ஜி கி சையான்’ என்றும் இந்தக்கோயில் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri