Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஜ்மீர் » ஈர்க்கும் இடங்கள் » தர்கா ஷரீஃப்

தர்கா ஷரீஃப், அஜ்மீர்

33

காஜா மொயின் – உத்- தின் சிஸ்தி என்ற புகழ்பெற்ற சூஃபி ஞானியாரின் சமாதி ஸ்தலமான இது மிக பிரசித்தமான ஆன்மீகத்திருத்தலமாகும். இந்த சூஃபி ஞானி தன் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்காகவும் பின் தங்கிய மக்களுக்காகவும் பாடுபட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான விஜயம் செய்யப்படும் இந்த ஸ்தலம் அனைத்து தரப்பினராலும் பூஜிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கதவுகளுடன் கூடிய கட்டமைப்பைக்கொண்ட இந்த தர்க்கா பல காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ளது. சூஃபி ஞானியின் நிஜ சமாதி வெள்ளியால் ஆன கைப்பிடி வேலிக்கு மற்றும் பளிங்கு திரைகளுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் உருஸ் திருநாள் தொடர்ந்து 6 நாட்களுக்கு இந்த புனிதஸ்தலத்தில் சூஃபி ஞானியின் நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆறு நாட்கள் விழா என்பதற்கு ஒரு முக்கியத்துவமும் உள்ளது. அதாவது சூஃபி ஞானியார் தனக்கு 114 ஆனபிறகு ஒரு தனியறையில் தன்னைப்பூட்டிக்கொண்டு 6 நாட்கள் தனிமைத்தொழுகையில் இருந்து பின்னர் பூத உடல் நீத்ததாக ஐதீகமாய் சொல்லப்படுகிறது.

சூஃபி ஞானியாரின் வாழ்த்துக்களைப்பெற்று அரியணை ஏறியபின் பேரரசர் அக்பர் கொடையாக இங்குள்ள பெரிய பாத்திரங்களை வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது. ஹுமாயுன் மன்னரால் கட்டப்பட்டுள்ள இந்த சமாதி மண்டபம் அஜ்மீரிலுள்ள ஒரு சிறிய மலைக்குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது வெண்பளிங்குக்கற்களால் கட்டப்பட்டு  பாரசீக வாசகங்கள் பொறிக்கப்பட்ட 11 விதான வளைவுகளையும் கொண்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue