Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலங்குடி » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில், ஆலங்குடி

5

ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் முக்கிய வழிபாட்டு விக்ரகம் சிவபெருமானுடையது ஆகும். சிவபெருமானை ஆபத்சகாயேஸ்வரராக இங்கு வழிபடுகின்றனர். சிவபெருமான் இங்கு சுயம்பு என்று அழைக்கப் படும் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். 

ஆலயத்தில் அமைந்துள்ள பிற தெய்வ விக்கிரகங்கள் : "களங்கமர் காத்த விநாயகர்" என விளங்கும் விநாயகப் பெருமான் மற்றும் குரு பகவான் அல்லது ப்ருஹஸ்பதி என விளங்கும் தட்சிணாமூர்த்தி.

எல்லா  வருடமும் குருப் பெயர்ச்சியின் போது குரு பகவானை வழிபட்டு வளம் பெறவும் கிரக நிலைகளினால் உண்டாகக் கூடிய தீமைகளில் இருந்து விடுபெறவும் பக்தர்கள் இக்கோயிலை மொய்க்கின்றனர்.

இச்சமயத்தில் மக்கள் குரு பகவானுக்காக சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழன் ஆகும். எனவே சிறப்பு பூஜைகள் எல்லா வாரமும் வியாழன் அன்று செய்யப் படுகின்றன.

ஆலங்குடி என்ற இவ்விடத்தின் பெயர் ஒரு பழங்கதையிலிருந்து உருவானதாகும்.பாற்கடல் கடையப்படும் போது வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷத்தினால் தேவர்களின் முயற்சியானது தடை பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அவர்கள் சிவபெருமானிடம் ரட்சிக்குமாறு வழிபட்டனர்.  சிவபெருமான் உடனே அந்த கொடிய விஷத்தை குடித்ததால் ஆலங்குடி என்ற பெயர் இவ்விடத்திற்கு உருவானது. இதன் மூலவரும் ஆபத்சஹாயேஸ்வரர் (ஆபத்திலிருந்து காப்பவர்) என்று அழைக்கப்படுகிறார்.

தேவர்கள்  கஜமுகாசுரன் மூலம் பயங்கரமான அனுபவங்களை பெற்ற சமயத்தில் அவன் விநாயகப் பெருமானால் தோற்கடிக்கப் பட்டான். எனவே விநாயகர் இவ்விடத்தில் "களங்கமர் காத்த விநாயகர்" என்று வழிபடப்படுகிறார்.

மேலும் பார்வதி தேவி சிவபெருமானிடம் திருமாங்கல்யதிற்காக தவமிருந்து பின்பு அவரையே மணம் முடித்ததால் இவ்விடம் "திருமண மங்களம்" என்ற பெயரிலும் புகழ் பெற்று விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue