சுமார் 320 ஆண்டுகளுக்கு முன்பு 1678ம் ஆண்டு இந்த கண்டேரி கோட்டை கட்டப்பட்டுள்ளது. பேஷ்வா வம்சத்தினரால் இது ஆங்கிலேயருக்கு அளிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.
அலிபாக்கில் உள்ள இந்த கோட்டை தாய் பீச்சிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு சிறு தீவின் மீது உறுதியாக இந்த கோட்டை காணப்படுகிறது. இதன் அருகாமையில் ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது.
இந்த கோட்டை தற்சமயம் மும்பை துறைமுக நிர்வாக அமைப்பின் மூலம் பராமரிக்கப்படுகிறது. பயணிகள் இந்த கோட்டையின் உள்ளே சென்று பார்ப்பதற்கு மும்பை துறைமுக நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications