அலிபாக் பகுதியில் உள்ள ஒரு பிரசித்தமான கோயில் இந்த சோமேஷ்வர் கோயிலாகும். அலிபாக்கிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள அக்ஷி எனும் சிறு கிராமத்தில் இது அமைந்துள்ளது.
விஷமாக மாறியிருந்த கடல்நீரை பருகி அதனை தேனாக சிவபெருமான் மாற்றியதாக புராண ஐதீகக்கதை சொல்லப்படுகிறது. சிவபெருமானின் அருளைப்பெற வேண்டி பக்தர்கள் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
கோயிலுக்கு செல்லும் வழியும் பல சாளக்கிராம புனிதக்கற்களை பக்தர்கள் பார்க்க முடிகிறது. இவற்றில் சிலவற்றை தீபஸ்தம்பத்துக்கு அருகிலும் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications