அலகாபாத் ஹை கோர்ட் எனும் இந்த உயர் நீதிமன்றம் நாட்டிலேயே முதல்முதலாக உருவாகப்பட்ட உயர நீதிமன்றமாகும். இது உத்தரப்பிரதேச மாநிலம் முழுமைக்குமான மேல் நீதிமன்றமாக செயல்படுகிறது. முதலில் ஆக்ரா நகரில் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றம் பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக அலாகாபாத் நகரத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது இந்த உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் கட்டிடம் 1950ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய வளாகமான இது இந்திய மற்றும் ஆங்கிலேயர் கட்டிடக்கலை அம்சங்களின் கதம்பமாக காட்சியளிக்கிறது. வளாகத்தின் எதிரில் அமைந்திருக்கும் நன்கு பரமாரிக்கப்பட்ட புல்தரைகள் இந்த வளாகத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.



Click it and Unblock the Notifications