உலகின் மிகப்பெரிய மற்றும் அதிமுக்கியமான செமினரிகளில் ஒன்றாக செயின்ட் ஜோசப் போண்டிஃபிகல் செமினரி என்று பிரபலமாக அழைக்கப்படும் செமினரி சர்ச் திகழ்ந்து வருகிறது. இந்த தேவாலயம் கத்தோலிக்க தேவாலயங்களின் முக்கியமான இறையியல் கல்வி நிறுவனமாக கருதப்படுகிறது.
செமினரி சர்ச் 1932-ஆம் ஆண்டு சமயாச்சார கிறிஸ்தவ கல்வி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. அதன் பிறகு 1966-ஆம் ஆண்டு வரை சைரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயங்களில் முன்னணி செமினரியாக செமினரி சர்ச் திகழ்ந்து வந்தது.
செமினரி சர்ச் பாதிரியார்களாக ஆக விருப்பப்படும் எண்ணற்ற நபர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இங்கு தத்துவம் மற்றும் இறையியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பும், முனைவர் பட்டத்துக்கான படிப்பும் கற்பிக்கப்படுகின்றன.
தற்போது இங்கு மொத்தம் 263 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த தேவாலயத்தில் கிறிஸ்த்தவ இலக்கியங்களை கொண்ட மிகப்பெரிய நூலகம் ஒன்றும், அமைதியான தியான மண்டபம் ஒன்றும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications