வி.கே.புரம் என்றழைக்கப்படும் விக்ரமசிங்கபுரம் அகஸ்தியர் அருவியின் அருகில் அமைந்துள்ளது. இங்கே பல மதங்களையும் ஜாதிகளையும் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இங்கே பல கோயில்களையும் கிறிஸ்துவ ஆலயங்களையும் காணலாம். சிவன் கோயில், சிவந்தியப்பர் கோயில், நாராயண சுவாமி கோயில், ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ணன் கோயில், புனித கால்வரி ஆலயம், செயின்ட் பீட்டர்ஸ் ஆலயம், பாலசுப்ரமணிய சுவாமி கோயில் ஆகியவைகள் அவற்றுள் சில.
தேயிலை தோட்டத்திற்கு பெயர் போன மாஞ்சோலை மலையும் இங்கே தான் உள்ளது. பள்ளிக்கூடங்களுக்காகவும் விக்ரமசிங்கபுரம் மிகவும் பிரபலம்.



Click it and Unblock the Notifications