அம்போலிக்கு அருகிலுள்ள இந்த மாதவ்காட் கோட்டை ஒரு அற்புதமான வரலாற்றுச்சின்னமாகும். தற்சமயம் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த கோட்டையானது ஷனிவார்வாடா என்றறியப்படும் புனே அரண்மனை கோட்டையை விட நான்கு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான சாலையிலேயே இந்த கோட்டை அமைந்துள்ளது.
இந்த கோட்டையிலிருந்து காணக் கிடைக்கும் காட்சி மனமயக்கத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. கண்ணுக்கெட்டிய வரை கொங்கணக்கடற்கரை மற்றும் அரபிக்கடல் நம் கண் கண் முன்னே விரிகிறது.
சூழ்ந்திருக்கும் பசுமையான காடுகள் ஒரு வண்ண ஓவியம் போன்றே கண்ணுக்கு விருந்தாய் காட்சியளிக்கின்றன. மகிழ்வுள்ளாக்கும் அற்புத அனுபவத்தை இந்த கோட்டை பயணிகளுக்கு அளிக்கின்றது.இந்த கோட்டைக்கு அருகில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இது சிவனின் அருளைப் பெற்றிருந்த ஒரு சித்தரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications