அம்போலியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் எழிலுடன் காட்சியளிக்கின்றது.
இந்த நீர்வீழ்ச்சி 10 அடி ஆழம் கொண்ட ஒரு பாறைப்பள்ளத்தாக்கில் வீழ்வதால் ஒரு எதிரொலிக்கும் நாதம்(ஒலி) உருவாகி பிரமிக்க வைக்கிறது. இந்த அருவியைச்சுற்றிலும் அற்புதமான இயற்கை எழில் நிறைந்து காணப்படுவதால் பயணிகளை சாந்தப்படுத்தி மகிழ்வூட்டும் இயல்புடன் இது அமைந்துள்ளது.
நீர்வீழ்ச்சி விழும் பாறைப்பள்ளத்தாக்கினை பயணிகள் நன்கு வசதியாக பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு பிரத்யேக பாலமும் இங்கு கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications