ஒரு மாலை நேரச்சிற்றுலாவுக்கு மிகப்பொருத்தமான ஸ்தலம் இந்த ஷிர்காவ்ங்கர் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளமாகும். அம்போலி நகரத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள இது பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.
இந்த ஸ்தலத்தை மழைக்காலத்தில் விஜயம் செய்து ரசிப்பது சிறந்தது. அச்சமயம் காற்று குளுமையுடனும் தூய்மையாகவும் இருப்பதோடு சுற்றியுள்ள பிரதேசம் புதிய பசுமையழகோடு காட்சியளிக்கின்றது.
மேலும் இந்த ஷிர்காவ்ங்கர் பாயிண்டுக்கு செல்லும் பாதையை சுற்றி அடர்த்தியான கானகம் அமைந்துள்ளதால் இயற்கை ரசிப்புக்கு மிக ஏற்றதாக உள்ளது. இந்த மலைக்காட்சி தளத்துக்குஅருகில் ஒரு ஷங்கர் மற்றும் தேவி கோயில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications