Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! » ஈர்க்கும் இடங்கள் » பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம்

பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்!

23

பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சரணாலயம் அஸ்ஸாமின் மேல்பகுதியில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் மூன்று கட்டிடத் தொகுதிகளாக விரிந்துள்ளது.

பல்வேறு வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. மெதுவாகச் செல்லும் வாலற்ற பாலுண்ணி விலங்குகள், அஸ்ஸாமீஸ் குரங்குகள், பன்றிவால் குரங்குகள், ரீசஸ் குரங்குகள், தொப்பித்தலைக் குரங்குகள், ஹூலாக் குரங்குகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற சில விலங்குகளும் இந்த சரணாலயத்தை தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன.

இந்த வனவிலங்குகள் சரணாலயம் நாட்டில் வேறெங்கும் காணமுடியாத பலவகை பறவைகளின் இருப்பிடமாகவும் உள்ளது. கழுகு போன்ற உருவுடைய கடற்பறவைகள், மீன்கொத்திப் பறவைகள், பல வண்ணங்களையுடைய இந்திய ஹார்ன்பில், லீனியேட்டட் பார்பட், மரங்கொத்தி, ட்ரோங்கோ, மைனா, புல்புல், மக்பை ராபின், வேக்டெயில் மட்டுமல்லாது பல வுட்லாண்ட் வகைப் பறவைகளையும் இங்கு காணலாம்.

பெர்ஜான்-போராஜன்-படுமோனி வனவிலங்குகள் சரணாலயம், மோஹன்பரி (திப்ருகார்) விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் பயண தூரத்தில் உள்ளது.

இது திப்ருகார் மற்றும் தின்சுகியா மாவட்டங்களிலிருந்து சாலை வழியாக எளிதில் அடையக்கூடியதாக உள்ளது. இங்கு செல்வதற்கு ஏதுவான காலம் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமே ஆகும்.

அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! படங்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun

Near by City