ஒராங் தேசியப் பூங்கா சுமார் 78 சதுர கி.மீ. பரப்பளவில் டர்ராங் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்காவைப் போன்றே அச்சு அசலாக இருப்பதினால் இது குட்டி காசிரங்கா பூங்கா என்றும் அறியப்படுகிறது.
இவ்விரண்டு பூங்காக்களும் சதுப்பு நிலங்கள், நீரோடைகள், மற்றும் புல்வெளிகள் கொண்ட ஒரே விதமான நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஒற்றைக் கொம்புடைய அரிய வகை இந்திய காண்டா மிருகத்தையும் ஒராங் தேசியப் பூங்காவில் காணலாம்.
ஒராங் தேசியப் பூங்கா ஒவ்வொரு வருடமும், வெள்ளை நாரை, பெருநாரை, ஷெல் வாத்துகள், காட்டு வாத்து, மீன்கொத்தி மற்றும் மரங்கொத்தி போன்ற பல்வேறு புலம்பெயர் பறவைகளின் வருகையினையும் காண்கிறது.
ராயல் வங்காள புலி, சிறுத்தைகள், இந்திய எறும்புதின்னிகள், புனுகுபூனைகள், குள்ளமான பன்றிகள் போன்ற ஏராளமான விலங்குகளும் இப்பூங்காவில் வசித்து வருகின்றன.
ஒராங் தேசியப் பூங்கா செல்வதற்கான உகந்த காலகட்டம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே ஆகும். சுமார் 56 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேஸ்பூர் நகரமே இத்தேசியப் பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரம் ஆகும். குவாஹத்தி, இப்பூங்காவில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.