மேன்மை பொருந்திய பிரம்மபுத்ரா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், லாவ்கோவா-புரச்சாபோரி சுற்றுச்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
இது அஸ்ஸாமின் நாகயோன் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், காண்டாமிருகங்கள் மற்றும் காட்டெருமைகளின் இயற்கையான வாழ்விடமாகத் திகழ்கிறது.
இவ்விரண்டு மிருகங்களுக்கும் அப்பாற்பட்டு, சுற்றுலாப் பயணிகள், சிறு மான்கள், புலி, சிறுத்தை பூனை, யானை, மீன்பிடி பூனை, புனுகு பூனை போன்ற இதர மிருகங்களையும் காணலாம்.
மேலும், இங்கு 225 -க்கும் மேற்பட்ட பறவை வகைகளும் காணப்படுகின்றன. இது சுமார் 39 வகை மீன்கள், 9 வகை நிலநீர்வாழ் உயிரினங்கள், 14 வகை ஊர்வன ஆகியவற்றின் இனப்பெருக்க மையமாகவும் செயலாற்றி வருகிறது.
லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்திற்கு செல்ல ஏதுவான காலம் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலமேயாகும். சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகயோன் நகரமே இச்சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள நகரமாகும்.
நாகயோனின் மாவட்டத் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாஹத்தி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போக்குவரத்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications