ஔரங்காபாதிலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் பசுமையான பூங்கா தோட்டம் இந்த பானி பேகம் தோட்டமாகும். மனதை லேசாக்கும் இதன் அழகுக்காக மிகவும் பிரசித்தி இந்த பூங்கா தோட்டம் பானி பேகத்தின் கல்லறை இதனுள்ளே அமைந்திருப்பதால் அவருடைய பெயரை பெற்றுள்ளது.
பானி பேகம் ஔரங்கசீப்பின் மகனான ஆஸாம் ஷாவின் மனைவி ஆவார்.இந்த தோட்டத்தில் முகலாய கட்டிடக்கலை அம்சத்தினை பறை சாற்றும் படியான விதானங்கள், நீர் ஊற்றுக்கள், தூண்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் அழகுக்காகவே இந்த தோட்டத்துக்கு சென்று வரலாம் என்றால் அது நிச்சயம் மிகையில்லை.