Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔரங்காபாத் » ஈர்க்கும் இடங்கள் » பான்சக்கி

பான்சக்கி, ஔரங்காபாத்

30

பான்சக்கி என்ற பெயர் நீர் சக்தியால் இயங்கும் ஒரு ஆலையை (செக்கு இயந்திரம்) குறிப்பிடுகிறது. இந்த அற்புதமான யந்திர அமைப்பும் கட்டிடக்கலை அமைப்பும் கலந்த வரலாற்று சின்னம் அக்காலத்தில் நம் முன்னோர்களின் தொழில் நுட்ப அறிவையும் கற்பனா சக்தியையும் பொதுப்பணித்துறை மேம்பாட்டையும் பறை சாற்றும் வகையில் காலத்தால் அழியாமல் நீடித்து நிற்கின்றது.

இந்த அதிசய கட்டமைப்பில் வெகு தூரத்திலிருந்து அதாவது 6 கி.மீ தூரத்திலிருந்து ஆற்று நீர் மண் குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு அந்த நீரின் வேகத்தின் மூலம் இங்குள்ள பான்சக்கி நீர் ஆலையில் உள்ள செக்கு யந்திரம் இயக்கப்பட்டு அதில் மக்களுக்காகவும் யாத்ரீகர்களுக்காகவும் தானியங்கள் அரைக்கப்பட்டன. நீரின் வேகத்தை அதிகரிக்க வைக்க வகையில் தொழில் நுட்பத்துடன் அந்த நீர்ப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இப்படி அமைக்கப்பட்டிருக்கும் பாதைகள் வழி வரும் நீர் சில இடங்களில் நீர்வீழ்ச்சி போல் வீழும் காட்சி அற்புதமான காட்சி ஆகும்.மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாகரிகங்களின் கண்டுபிடிப்புகளுக்கு சற்றும் சளைக்காத இந்த யந்திர பொறியியல் வடிவமைப்பும் அவற்றுக்கு மூல காரணமாக இருந்த அன்றைய மன்னர்களின் பொது ஜன பார்வையும் இந்த பான்சக்கி வரலாற்று சின்னத்தை பார்க்கும்போது மெய் சிலிர்க்க வைக்கின்றன.

இந்தியர் ஒவ்வொரும் அவசியம் காண வேண்டிய இடம் இந்த பான்சக்கி வரலாற்று சின்னம் என்றால் அது மிகையில்லை. பான்சக்கியில் நுழைவு கட்டணமாக இந்தியர்களுக்கு ஐந்து ரூபாயும், வெளி நாட்டவர்க்கு நூறு ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri