Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔரங்காபாத் » ஈர்க்கும் இடங்கள் » பீபீ கா மஃக்பாரா

பீபீ கா மஃக்பாரா, ஔரங்காபாத்

30

ஔரங்காபாத் அருகில் அமைந்துள்ள இந்த பீபீ கா மஃக்பாரா என்ற நினைவுச்சின்னம அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். ஔரங்காபாதிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம் ஔரங்கசீப்பின் மகனான இளவரசர் ஆஸாம் ஷா என்பவரால் அவரது தாய் பேஹம் ரபியா துரானிக்காக கட்டப்பட்டதாகும்.

அதா உல்லா என்ற கட்டிடக்கலை நிபுணர் இந்த கல்லறைக்கட்டிட்த்தை நிர்மாணித்த கலைஞர் ஆவார். இவர் இந்த கல்லறைக் கட்டிடத்தை இன்னொரு தாஜ் மஹாலைப்போன்றே உருவாக்க முயன்றிருப்பது தெளிவாக புரிந்தாலும், அதில் அவர் வெற்றி பெற வில்லை.

தாஜ் மஹால் உருவாக்கும் பிரமிப்பையும் மலைப்பையும் இந்த நினைவகம் ஏற்படுத்தவில்லை. ஆகவே இது தாஜ் மஹாலை பின்பற்றிய ஓரு நகல் என்ற பெருமையை மட்டுமே வரலாற்றில் பெற்றுள்ளது.

இருப்பினும் பரந்து விரிந்த புல்வெளி தோட்டத்தின் நடுவில் தடாகங்களும், நீரூற்றுகளும், நீர்க்கால்வாய்களும் சூழ்ந்திருக்க மணற்பாறைகளால் எழுப்பப்பட்டு சுவர்கள் பூச்சு பூசப்பட்டு மேற்கூரையில் சலவைக்கல்லான குமிழ் வடிவ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த நினைவுக்கல்லறை மாடம்.

இதன் உள்ளே எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட சலவைக்கல் அமைப்பில் கல்லறை உள்ளது. இந்த நினைவகம் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படுகிறது. நுழைவுக்கட்டணமாக இந்தியர்களுக்கு 10 ரூபாயும் வெளி நாட்டவர்க்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed