Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அவந்திப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » சிவ-அவந்தீஷ்வரா கோயில்

சிவ-அவந்தீஷ்வரா கோயில், அவந்திப்பூர்

9

அவந்திப்பூரின் முக்கியமான கவரும் அம்சமாக விளங்கும் சிவ-அவந்தீஷ்வரா கோயில், அதன் மிகப் பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்களினால், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

அவந்திப்பூரில் உள்ள இரு முக்கிய கோயில்களான, சிவ-அவந்தீஷ்வரா மற்றும் அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில்களுள், இதுவே பெரியதாகும். முதல் உத்பல மன்னனாகிய, சுகவர்மனின் மகனாகிய, அந்திவர்மனால் கட்டப்பட்ட இக்கோயில், இந்து மதத்தினரால், அழிக்கும் கடவுள் என்று போற்றப்படும், மஹாதேவ் என்ற பெயராலும் அழைக்கப்படும், சிவனுக்காக எழுப்பப்பட்டதாகும்.

இந்த யாத்ரீக ஸ்தலம், பல வருடங்களாக, பூமிக்குக் கீழே புதைந்து கிடந்து, பின்னர், 18-ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களால் தோண்டி எடுக்கப்பட்டது. இவ்வாறு தோண்டப்பட்ட, இக்கோயிலின் சிலைகள் சிலவற்றை, ஆங்கிலேயர்கள் தங்களுடன் எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.

தற்சமயம், சிவ-அவந்தீஷ்வரா மற்றும் அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட கலைப் பொருட்கள் சிலவற்றை, ஸ்ரீநகரில் உள்ள, ஸ்ரீ பிரதாப் சிங் அருங்காட்சியகத்தில் காணலாம்.

இக்கோயில், அக்காலத்தில் பிரபலமாக இருந்திருக்கக்கூடிய கட்டிடக் கலை பாணியை நம் கண் முன் நிறுத்துகிறது. கால ஓட்டத்தில், இக்கோயில் வெறும் இடிமானங்களின் குவியலாக மாறி விட்டது.

இவ்விடத்தை ஆண்ட, “புத்ஷிகன்” என்றும் அழைக்கப்படும் சிக்கந்தர் சுல்தானால், தாக்கப்பட்டபோது, இக்கோயில் பெருமளவில் சிதைந்துள்ளது. மேலும், இக்கோயிலைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்களுக்கு, இயற்கை மற்றும் காலத்தின் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு வலிமை இருந்திருக்கவில்லை.

இக்கோயிலில், பல்வேறு தெய்வங்களின் பலவிதமான திருக்கோலங்கள், வெவ்வேறு கோணங்களில், சிலை வடிவில் வடிக்கப்பட்டுள்ளதை காணலாம். கூர்ந்து கவனித்தால், சிவ-அவந்தீஷ்வரா கோயிலின் சுவர்கள், ஒரு கால்த்தில், சுண்ணாம்புக் காரையினால் பூசப்பட்டிருந்ததை அறிந்து கொள்ளலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat