Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அவந்திப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில்

அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில், அவந்திப்பூர்

9

அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில், முதல் உத்பல மன்னனாகிய, சுகவர்மனின் மகனாகிய அந்திவர்மனால், அரியணை ஏறுவதற்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயில், சிவ-அவந்தீஷ்வரா கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இதன் பெயர் உரைப்பதைப் போலவே, இக்கோயில், இந்து மதத்தினரால், காக்கும் கடவுள் என்று போற்றப்படும், விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டதாகும். இக்கோயில், சிவ-அவந்தீஷ்வரா கோயிலுடன் ஒப்பிடுகையில், சிறியதாகும்.

அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில், சிவ-அவந்தீஷ்வரா கோயிலை விட சிறியதாக இருப்பினும், இரு கோயில்களுக்கும் ஓரே விதமான கட்டுமானப் பொருள்களே உபயோகிக்கப்பட்டிருந்தாலும், இது சிவன் கோயிலை விட குறைவாகவே சிதிலமடைந்துள்ளது.

மன்னன் அவந்திவர்மன், மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தி, இவ்விரு கோயில்களையும் கட்டச் செய்துள்ளார். இவ்விரு கோயில்களும் சிதிலமடைந்து இருப்பினும், அந்த இடிபாடுகளுக்கு இடையேயும், இக்கோயிலைக் கட்டிய வல்லுநர்களின் தேர்ந்த கலைத் திறமையை, இப்போதும் காணலாம்.

இக்கோயிலின் மறு சீரமைப்புப் பணிகளுக்கான பொறுப்பு, டி.ஆர். சாஹ்னி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இம்மறுசீரமைப்புப் பணிகளின் போது, தொல்பொருள் ஆய்வாளர்கள், சீன, முஸ்லீம், மற்றும் இந்திய ராஜ்ஜியங்களைச் சேர்ந்த எண்ணிலடங்கா நாணயங்கள் மற்றும் பழம்பொருட்களை கண்டுபிடித்தனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed