Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அயோத்யா » ஈர்க்கும் இடங்கள் » ஹனுமான் கர்ஹி

ஹனுமான் கர்ஹி, அயோத்யா

20

அயோத்யாவில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்று தான் இந்த ஹனுமான் கர்ஹி. ஹனுமான் கர்ஹி என்றால் ஹனுமானின் இருப்பிடம் என்று பொருளாகும்.

இது ஹனுமான் கடவுளுக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவில் அயோத்யாவில் உள்ள ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளதால், தூரத்தில் இருந்து பார்த்தாலும் இந்த கோவில் நன்கு தெரியும். இந்த கோவிலை அடைய 76 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

இக்கோவில் கட்டுவதற்கான இடத்தை கொடுத்தது அவாத்தின் நவாப்பாகும். இது அவருடைய வைப்பாட்டிளில் ஒருத்தியால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இது ஒரு குகைக் கோவிலாகும். இந்த கோவிலைச் சுற்றி கோட்டைப் போன்ற கட்டிடம் எழுப்பப்பட்டது. இதன் நாலாப் பக்கமும் வட்ட வடிவத்தில் கோட்டையின் முன் தள்ளிக் கொண்டிருக்கும் முகப்புகளை காணலாம்.

இக்கோவிலின் கருவறையில் மா அஞ்சனியின் விக்கிரகமும், அவரின் மடியில் குழந்தை ஹனுமான் அமர்ந்திருப்பதை போன்ற விக்கிரகத்தையும் காணலாம்.

இந்த கோவில் சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தையும் சேர்த்து கட்டிடக் கலைக்காகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இங்கு வந்து கடவுளை தரிசித்தால் நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால் இக்கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri