அயோத்யா என்பது ஸ்ரீ ராமர் பிறந்த நகரம் என்பதால் வருடம் முழுவதும் பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் இருப்பர். பல கோவில்கள், மலைகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னகளை கொண்டுள்ளது என்று மார் தட்டினாலும், நாளுக்கு நாள் பெருகி வரும் பக்தர்களின் கூட்டம் இந்த இடத்தை நெரிசல் மிக்கதாக மாற்றி வருகிறது; குறிப்பாக விழா காலங்களில்.
இந்த நெரிசல்களில் இருந்து இளைப்பாறுவதற்காகவே ராம் கதா என்ற பூங்கா கட்டப்பட்டது. பெரிய இட வசதி கொண்ட இந்த அழகிய பூங்கா நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவில் திறந்த வெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சமயஞ்சார்ந்த, மதம் சார்ந்த மற்றும் ஆன்மிகம் சார்ந்த விழாக்களும் இங்கே தான் நடக்கும். இந்த பூங்காவில் பொதுமக்களுக்காக உபதேசங்கள், ஆன்மீக நூலிலிருந்து சொற்பொழிவுகள் மற்றும் சமயஞ்சார்ந்த செயல்கள் எதாவது நடந்து கொண்டே இருக்கும்.
மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் வளரும் திறமைசாலிகள் தங்கள் திறமையை (நடனம், இசை அல்லது கவி போன்றவைகள்) இங்குள்ள அரங்கத்தில் வெளிப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்த பூங்கா அனைத்து வயதினரும் சாயங்கால நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் இளைப்பாறுவதற்கு புகழ் பெற்ற ஒரு இடமாகும்.



Click it and Unblock the Notifications