துளசி உதயன் என்பது ஒரு தோட்ட பூங்கா. இது கவி மற்றும் துறவியான துளசி தாஸின் நினைவாக அமைக்கப்பட்டது. இவர் ராம்சரித் மனாஸ் என்றழைக்கப்படும் ராமாயணத்தை எழுதியவர். அழகாக வடிவமைக்கப்பட்ட இவருடைய சிலையும் கூட இங்கு நிறுவப்பட்டிருக்கிறது.
இந்த பூங்கா பைசாபாத்தை கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அயோத்யா பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த பூங்காவிற்கு முதலில் இங்கிலாந்தின் மகாராணி விக்டோரியாவின் நினைவாக விக்டோரியா பூங்கா என்று தான் பெயர் இருந்தது.
அவருடைய சிலை கூட இங்கு இருந்தது. பின்னர் 1960-ஆம் ஆண்டு இந்த பூங்காவிற்கு துளசி தாஸ் அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டது. இந்த பூங்காவை உத்திர பிரதேச அரசாங்கத்தின் கீழ் இயங்கும் உதயன் விபாக் தான் பராமரித்து வருகிறது.



Click it and Unblock the Notifications