Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூருவிலிருந்து 60 வாரஇறுதி விடுமுறை நாள் கொண்டாட்ட சுற்றுலாத் தளங்கள்

பெங்களூருவிலிருந்து 60 வாரஇறுதி விடுமுறை நாள் கொண்டாட்ட சுற்றுலாத் தளங்கள்

By Bala Karthik

பெங்களூருவிலிருந்து அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு வார இறுதி நாள்களில் சென்று ஓய்வெடுங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள். ஒரு மிகச் சிறந்த வீக் எண்ட் சுற்றுலாவுக்கு வசதியான, இதமான, இயற்கை எழில் சூழ்ந்த மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிகுந்த இடங்களைத் தேர்வு செய்யுங்கள். மேலும் சாகச பயணங்களுக்கும், ஆன்மீகப் பயணங்களுக்கும் சேர்த்தே திட்டமிடுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த உலகை சுற்றிப் பாருங்கள். இப்போதே திட்டமிடுங்கள். குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் அல்லது தன்னந்தனியாக தனிமையில் இனிமை காணும் பயணங்களை மேற்கொள்ளுங்கள்.

ராமநகரா:

ராமநகரா:

PC: Navaneeth K N

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 55 கிலோமீட்டர்கள் மட்டுமே...

1970இல் வெளிவந்து பட்டையை கிளப்பிய பாலிவுட் திரைப்படமான ஷோலய்யின் கப்பர் சிங்க் கொள்ளைக்காரன் மறைந்திருந்த இடமாக காணப்படும் இவ்விடமான ராம்நகரா, பெங்களூருவின் தோட்டத்து நகரத்தின் அருகாமையில் காணப்படுகிறது. நகரத்து நெரிசலில் நாக்கு தொங்கிய உங்கள் அசதிக்கு ஏற்ற பிரசித்திப்பெற்ற வார விடுமுறை இடமாக இவ்விடம் அமைகிறது. பயண மற்றும் சாகச ஆர்வலர்களின் சொர்க்கமாக ராம்நகரா காணப்படுகிறது. மாபெரும் கற்பாறைகள் உயர்ந்து காணப்பட அதன்மீது ஏறும் பயணமாக ராமதேவரா பேட்டா அமைகிறது. ஒரு குட்டி போதை ஏற, பாரம்பரிய ஒயின் ஆலையில் மது சுற்றுலாவர, கோப்பையை உங்களுக்காக எடுத்தும் கொள்ளலாம்.

மத்தூர்:

மத்தூர்:

PC: Sudhi

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 86.9 கிலோமீட்டர்கள் மட்டுமே...

NICE சாலையில் ஒரு நீண்ட நெடிய நிதான பயணம் செல்ல, நகரத்து குழப்ப வாழ்க்கையை கடந்து நகர்ந்து நாம் வெளியில் செல்கிறோம். ஜோடியாக இருபத்து நான்கு மணி நேர கஃபேயான ‘காபி டே'இல் அமர்ந்து சூடான கப்பாவை நாக்கின் உள்ளே இழுக்க, அதோடு சுவையூட்டும் சிற்றுண்டியையும் ருசித்து சாப்பிட்டு கொள்ளலாம். என்ன சாப்பிடலாம் என நாம் மனதின் உள்ளே முனுமுனுத்தாலும், ‘மத்தூர் வடா' என அனைவரும் ஒரே நேரத்தில் கத்தக்கூடிய சுவையை இந்த வடா நமக்கு தருகிறது. சாப்பிட்டாச்சா? நல்லது... பெங்களூருவிலிருந்து மத்தூருக்கு நாம் செல்வது சிறப்பான வார விடுமுறையாக நமக்கு அமைகிறது.

சன்னப்பட்னா:

சன்னப்பட்னா:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 66.7 கிலோமீட்டர்கள் மட்டுமே...

உங்களுடைய குழந்தையான உள்மனதுடன் ஒட்டி உறவாடும் நேரமாக அமைய, குழந்தைகள், குடும்பம், நண்பர்களுடன் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ள இந்த கர்நாடகத்தின் பொம்மை நகரமான சன்னப்பட்னா உதவுகிறது. வண்ணமயமான, குதுகலிக்கும் பொம்மை நகரத்தில் உங்கள் மனம் கவர்ந்த ஒரு நபருடன் நீண்ட நெடிய காதல் பயணம் செல்ல இவ்விடம் வழிவிடுகிறது. அல்லது உங்களுடைய பொன்னான நேரத்தை ஷாப்பிங்க் மூலமாக சில தனித்துவமிக்க விஷயங்களை கொண்டு செலவிட, உங்களுடைய குழந்தைகளின்மீது கவனமானது இருத்தல் வேண்டும். அமைதி மற்றும் உன்னதமான உணர்வை நீங்கள் பெற, சன்னப்பட்னாவின் ஆன்மீகத் தளத்திற்கும் சென்று வரலாம்.

மாலூர்:

மாலூர்:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 55.3 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இங்கே வீசும் மல்லிகை, ரோஜா, யூக்கலிப்டஸ் நறுமணம் உங்கள் நாசியின் வழியாக செல்ல, அதன் நறுமணத்தை முழுவதுமாய் நுகரும் உங்கள் நாசி, உங்களுக்கு நன்றி சொல்லிட, மாலூரின் புகை மற்றும் தூசியை அது மறக்கவும் கூடும். ஆம், பெங்களூருவின் அருகாமையில் காணப்படும் மாலூர் நகரம், தாவர வளர்ப்புக்கும், சுத்தமான காய்கறிகள் விளைச்சலுக்கும் பிரசித்திப்பெற்ற இடமாக விளங்க, இங்கே காணப்படும் பெருமைவாய்ந்த சிக்கா திருப்பதி ஆலயத்திற்கும் நாம் வருவதன் மூலம், உண்மையிலே திருப்பதி ஆலயத்துக்கு சென்றதோர் உணர்வினை மனதில் கொள்ளக்கூடும்.

கனகபுரா:

கனகபுரா:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 62.1 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பச்சை பசேலென்னும் பசுமை சூழல் காணப்பட, கனகபுரா தூய்மையான காற்றை சுவாசிக்க நமக்கு உதவுவதோடு, பிடித்தமான சுற்றுலா இலக்காகவும் கர்நாடகாவில் காணப்படுகிறது. பட்டு உற்பத்திக்கு பிரசித்திபெற்ற இவ்விடம், அற்புதமான பட்டு பொருட்களை ஒருவர் வாங்கவும் நேரடியாக நம்மை அழைக்கிறது. இதன் அருகில் ஒரு நதி காணப்பட, அதன் பெயர் ஆர்காவதி என்றும், மாபெரும் மச்சனபெல்லே அணையும், நீர்த்தேக்கமும் இங்கே காணப்பட, சாகச பிரியர்களுக்கு கயாகிங்க்கும், எண்ணற்ற பயணம் மற்றும் சவாரிகளும் உதவ, அமைதியான நடைகொண்டு இயற்கையை ரசிப்பதோடு, சாகச கூடாரங்களும் அமைத்து, ஆன்மீகத்தில் ஈடுபடுவதோடு, வரலாற்று தளங்களை நோக்கி பின் செல்லவும் நம்மால் முடிய, கனகபுரா ஏதோ ஒரு சிறப்பம்சத்திற்கு என அனைத்து தரப்பினரையும் கவர்கிறது.

பீமேஷ்வரி:

பீமேஷ்வரி:

PC: Ashwin Kumar

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 100 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பெங்களூருவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பீமேஷ்வரி, இயற்கையும், சாகசமும் இணைந்த எளிய சிறந்த பயணமாக அமைகிறது. குறிப்பாக, வேலையினால் ஒரு விரைவு இடைவெளியை நீங்கள் தேடினால் அதற்கு இவ்விடம் சிறந்து அமைகிறது. சாகச ஆர்வலர்களுக்கு எவ்வித பற்றாக்குறையையும் இவ்விடம் வைப்பதில்லை என்பதால், பயணம் செல்லுதல், படகு சவாரி, கயாகிங்க் அல்லது ஷிப்லைனிங்க் என அனைத்தும் பீமேஷ்வரியில் காணப்படுகிறது. இயற்கை மற்றும் வனவிலங்கு பிரியர்களுக்கும், மரத்தில் காணும் பறவைகளை பார்ப்பது, காணப்படும் மசூதிகளை நோக்கிய சவாரிப்பயணம் என இங்கே பலவும் காணப்படுகிறது. மேலும், மீன்பிடித்தல் மற்றும் ஆங்கிளிங் கூடாரம் அமைத்தல் ஆகியவற்றிற்குக்கூட இந்த பீமேஷ்வரி புகழ்பெற்று விளங்குகிறது.

அந்தர்கங்கே:

அந்தர்கங்கே:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 67.5 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இரவு நேரங்களில் மனம் பதைப்பதைக்க நடக்க ஆசைகொள்பவராக நீங்கள் இருந்தால், இரவு பயணத்துக்கு ஏற்ற இடமாக அந்தர்கங்கே அமைவதோடு குகை ஆராய்ச்சியிலும் நம்மை ஈடுபடவைப்பதால், அது ஒருவித புது அனுபவத்தை மனதில் தந்திட! தனித்துவமிக்க நிலப்பரப்பை கொண்டிருப்பதோடு, அந்தர்கங்கே பகுதி உலக அற்புதம் நிறைந்ததாய் குகைகள் நிரம்பி காணப்பட - அவை பெரிய, சிறியனவாக, இரகசிய வழிகளையும் கொண்டு, எண்ணற்ற கற்பாறைகளையும் கொண்டிருக்கிறது. பாறை நிலப்பரப்புகள் பயணம் செல்ல ஏதுவாக அமைய, பாறை ஏறுவதனை பொழுதுபோக்காக கொள்வோர்க்கு இப்பயணம் சிறப்பாக அமையக்கூடும்.

சிவ்கங்கே:

சிவ்கங்கே:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 52.3 கிலோமீட்டர்கள் மட்டுமே...

அமைதியான, உன்னதமான, சாகச கோடு கிழித்து விளையாடுவோருக்கு - இந்த மூன்று வித அனுபவத்தையும் ஒரே நேரத்தில் தரக்கூடியதாக சிவ்கங்கே அமைந்து காணப்படுகிறது. இந்த சிவ்கங்கே மலைப்பகுதியானது சிவலிங்கா வடிவத்தில் காணப்பட, அழகிய தூய ஓடை நீர் பாய்ச்சலையும் அருகில் கொண்டிருக்க, அதனை ‘கங்கை' என அழைக்கப்பட, இந்த இரண்டு காரணங்களால் இம்மலைக்கு இப்பெயர் கிடைத்ததாகவும் தெரியவருகிறது. பாறை ஏறுதல் மற்றும் பயணம் செல்லுதலுக்கு பிரசித்திப்பெற்ற இவ்விடம், விடுமுறையின் போது வந்து செல்ல பிடித்தமான இடமாகவும் அமைகிறது. பெங்களூருவிலிருந்து ஒரு நீண்ட பயணம் வர, சிகரம் ஏறி, அழகிய ஒட்டுமொத்த காட்சியை கண்டு சுற்றுசூழலை நினைத்து வியப்பின் எல்லைக்கும் நாம் செல்லலாம்.

மதுகிரி:

மதுகிரி:

PC: Rajeev Rajagopalan

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 104.9 கிலோமீட்டர்கள் மட்டுமே...

1000 மீட்டர் உயரத்தில் இருக்கும், மதுகிரி மலையானது ஆசியாவின் இரண்டாவது பெரிய ஒற்றைக்கல் உருவமாகும். இந்த மாபெரும் ஒற்றைக்கல்லுக்கு, பயண ஆர்வலர், சாகச பிரியர்கள் என அனைவரும் வந்து மகிழ்ச்சியில் திளைக்க, அவர்கள் தங்களுடைய நகரத்து நெரிசல் வாழ்க்கையை மறந்து ஆறுதலையும் தேடுகின்றனர். இந்த உச்சியின் இலக்கை எட்ட விரைவாக செங்குத்தான சாய்வல் வழியாக ஏறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா...! இங்கே காணப்படும் பெருமளவிலான தேனி காலனிகளால் இவ்விடத்திற்கு இப்பெயர் கிடைத்திட ஒரு காலத்தில் இந்த மலையின் முக்கிய பகுதியில் வசித்து வந்தனர் எனவும் தெரியவருகிறது.

நிமிஷம்பா:

நிமிஷம்பா:

PC: Mike Prince

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 130.7 கிலோமீட்டர்கள் மட்டுமே...

காவேரி நதியின் ஆற்றங்கரையில் காணப்படும் நிமிஷம்பா, பிரசித்திப்பெற்ற யாத்ரீக இடமாகும். நீங்கள் ஆலயங்கள் மீது ஆர்வம் காட்டாத ஒருவராக இருப்பினும், இங்கே நீண்ட நெடிய பயணம் வந்து காதல் கொண்டு, அமைதியையும், நதி ஆற்றங்கரையின் மீதப்பகுதியில் காணப்படும் கிராமிய காட்சிகளையும் ரசித்திட, காவேரி ஆற்றின் சங்கமிக்கும் அழகிய காட்சியையும் கண்டு சிறந்த மன நிலையை மனதில் உருவாக்கிக் கொள்ளக்கூடும்.

ஸ்ரீரங்கப்பட்டினம்:

ஸ்ரீரங்கப்பட்டினம்:

PC: C Chandranath

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 130.2 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இந்த நகரத்தை பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால், இவ்விடம் கொஞ்சம் தள்ளிக்காணப்படும் எளிதில் வகைப்படுத்த இயலாத மற்றுமோர் நகரமாக அமைகிறது. - இருப்பினும், இதனை நம்ப, இங்கே காணப்படும் எண்ணற்ற விஷயங்களை ரசித்து! ஸ்ரீரங்கப்பட்டினத்தின் எண்ணற்ற காட்சிகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கிடலாம். இயற்கை, கலாச்சாரம், மதம், மற்றும் வரலாறு என பொதிந்து கிடக்கும் இவ்விடம் - அனைத்து தரப்பு சுற்றுலா பயணிகளையும் கவரும்விதமாகவும் காணப்படுகிறது. வரலாற்று நினைவுகளையும், அமைப்புகளையும் தோண்டி எடுத்திட, அவை முகலாய மற்றும் பிரிட்டிஷ் காலத்தவை என்பதும் தெரியவர, இங்கே காணப்படும் ஆலயங்களையும் அவற்றின் சுவாரஷ்யமான புராணக்கதைகளையும் தெரிந்துக்கொள்வதோடு, அழகிய வனவிலங்கு வாழ்க்கை மற்றும் இயற்கை அழகினைக்கொண்டு மனதை மூழ்கடித்திடலாம்.

மைசூரு:

மைசூரு:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 150 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பிரசித்திப்பெற்ற பாரம்பரிய நகரமான மைசூரு அனைத்து விதத்திலும் பெயர் பெற்று காணப்படும் ஒன்றாகும். ஒவ்வொரு தடவையும் மைசூருக்கு நாம் வருவதன் மூலம் புதுவித அனுபவத்தை அடைய, பல்வேறு விஷயங்களை கண்டுபிடித்திடவும் நம்மை அழைக்கிறது. அதிசயமான மைசூரு நகரத்திற்கு வருவதன்மூலமாக அரச நகரத்தின் வழியாகவும் பயணித்திட வேண்டி இருப்பதோடு, நூற்றாண்டுகளை கடந்த பழமை அவை என்பதும் நமக்கு தெரியவர, வண்ணமயமான சந்தைகளில் பட்டு, வாசனை திரவியம், சந்தனக்கட்டை, அதோடு மட்டுமல்லாமல், பழமையான கல் படிவழியாக ஏறுதல், சாமுண்டி மலையின் அமைதியை நுகர்தல், என இந்த துடிப்பான நகரம் வலுவடைந்து வரலாற்றை தாங்கிக்கொண்டு நிற்கிறது. மேலும், தேவாலயங்கள், ஆலயங்கள், அரண்மனை, கோட்டைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், வனவிலங்கு பூங்கா, வனவிலங்குகள் என பெயர் சொல்லும் பெருமைமிக்க இடமாக அனைத்தையும் கொண்டு காணப்படுகிறது மைசூரு.

பிடாடி – புதுமையான திரைப்பட நகரம்:

பிடாடி – புதுமையான திரைப்பட நகரம்:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 39.7 கிலோமீட்டர்கள் மட்டுமே...

ஒருவரது விளையாட்டுத் தனத்திற்கும், குறும்பிற்கும் வயது வரம்பு என்பது ஒருபோதும் கிடையாது! பெங்களூருவிற்கு அருகில் காணப்படும் புதுமையான திரைப்பட நகரமான பிடாடியும் அதுபோல எண்ணற்ற விளையாட்டுகளை கொண்டு அனைத்து தரப்பு வயதினரையும் கவர, ‘நிஜமாகவா! என்னால் நம்ப முடியவில்லை...! நானே சென்று பார்த்து வருகிறேன்...' என புறப்படுவோர்கள் ஏராளம். அங்கீகரிக்கப்பட்ட சிறந்த தீம் பூங்காவினுள் ஒன்று இங்கே காணப்பட, ஒய்வை தேடி ஆற்றலை புதுப்பிக்கவும் மனமானது ஆசைப்படுகிறது. ஒட்டுமொத்த நாளையும் குடும்பம், நண்பர்கள், நெருங்கிய வட்டாரத்துடன் என நாம் இந்த புதுமையான திரைப்பட நகரத்தில் செலவிட, கூட்டமானது நகர நகர சேர்ந்துக்கொண்டேயும் இருக்கிறது.

குண்டி பெட்டா:

குண்டி பெட்டா:

PC: Prashanth Shivanna

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 128.6 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இரவு பயணத்துக்கு பிரசித்திப்பெற்ற, குண்டி பெட்டா பெங்களூரு முழுவதிலும் காணப்படும் பெரும் த்ரில்லான பயணங்களுள் ஒன்றாக அமைகிறது. பாண்டவப்புரா நகரத்தை தழுவி காணப்பட, பெங்களூருவிலிருந்து தூரத்திலும் இது காணப்படவில்லை, குண்டி பெட்டா நாம் பார்க்க வேண்டிய ஒரு இடமாக அமைய, குறிப்பாக பயண ஆர்வலர்களுக்கு ஏற்ற பயணமாக அமையக்கூடும். நட்சத்திரங்களை நோக்கிய கூடாரத்தை நாம் அமைத்திட, இதன் உச்சியானது அற்புதமானதோர் உணர்வினை தந்து பயணத்தின் பெருமையை உணர்த்துகிறது. சூரிய உதயமானதை காணும் நம் கருவிழிகள் ஒட்டுமொத்த காட்சியில் தெரியும் வயல்களையும், கரும்பு தோட்டத்தையும் கண்டு வியந்திட, சுமார் 2800 மீட்டர் உயரத்தில் நாம் நின்றுக்கொண்டிருக்கிறோம் என்பதனை தெரிந்த நம் மனதில் ஒரு சிலிர்ப்பும் ஏற்படக்கூடும்.

மகலித்துர்கா:

மகலித்துர்கா:

PC: Sakeeb Sabakka

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 64.3 கிலோமீட்டர்கள் மட்டுமே...

அழகிய காட்சியும், த்ரில்லர் அனுபவத்தையும் தரும் மகாலித்துர்கா...வாசிகள், பயண ஆர்வலர்கள், சாகச பிரியர்களுக்கு ஏற்ற நகரத்தில் காணப்படும் பிடித்தமான விடுமுறை இடங்களுள் ஒன்றாக காணப்படுகிறது. இவற்றை கடந்து இவ்விடத்தில் இரண்டு கயிர்களுக்கு நடுவே செங்குத்தான மலையில் ஏறும் ரெப்பேலிங்க், பாறை ஏறுதல் சாகச செயல்களாக அமைய, இரவு பயணத்திற்கு ஏற்ற சிறந்த பிரசித்திப்பெற்ற இடமாக மகலித்துர்கா அமைகிறது. அழகிய ஏரியால் சூழ்ந்திருக்க, இதன் வடிவமானது தென்னமெரிக்கா கண்டம் போன்ற வடிவத்தை கொண்டிருக்க, மகலித்துர்கா மலையில் மகலித்துர்கா கோட்டை மற்றும் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் உயரத்தில் காணப்பட, இதுவரை கண்டிராத காட்சியாக சூரிய உதயமும், சூரிய அஸ்தமனும் அமைந்து காணப்படுகிறது.

தேவராயனதுர்கா:

தேவராயனதுர்கா:

PC: Mishrasasmita

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 71 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இது போன்ற ஒரு தோற்றத்தில் ஏதோ ஒன்றை நீங்கள் உணரக்கூடும்: மலை பாறைகளின் முடிச்சுகளில் எண்ணற்ற ஆலயங்கள் காணப்பட, மத்தியில் நெருக்கமாய் வரண்ட காடுகளும் பரவி காணப்படுகிறது. அப்பேற்ப்பட்ட ஒரு இடம் இருப்பதை வார்த்தைகளால் மட்டும் வர்ணித்துவிட முடியுமா என்ன? பெங்களூருவிற்கு அருகில் காணப்படும் பிரசித்திப்பெற்ற மலைப்பகுதியான தேவராயனதுர்கா வாரவிடுமுறைக்கு ஏற்ற சிறந்த வாசஸ்தளமாகும். இதன் சிறந்த கால நிலையும், பயணம் செல்லுதல், அழகிய ஆலயங்கள் மற்றும் இயற்கை அழகென பிரசித்திப்பெற்று விளங்குகிறது.

சவன்துர்கா:

சவன்துர்கா:

PC: Siddharth Sarangan

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 69.1 கிலோமீட்டர்கள் மட்டுமே...

ஆசியாவில் காணப்படும் மிகப்பெரிய ஒற்றைகல் சிற்பமான இந்த சவன்துர்கா மலை, பெங்களூருவின் அருகில் காணப்படும், அட்ரினலினை அதிகம் சுரக்க வைக்கும் அற்புத மலையாகும். பிலிகுட்டா மற்றும் கரிகுட்டா என்னும் இரண்டு மலைகளால் உருவான இவ்விடம், உள்ளூர் பரிணாமத்தின்படி ‘வெள்ளை மலை' மற்றும் ‘கருப்பு மலை' என்றழைக்கப்பட, பாறை ஏறுதல், குகை ஆராய்ச்சி, பல்வேறு விதமான கடின நிலைகளை கடந்து செல்லுதல் போன்ற பல சாகசங்களை இந்த சவன்துர்கா கொண்டிருக்கிறது. மேலும், மலைஅடிவாரத்தில் பிரசித்திப்பெற்ற லக்ஷ்மி நரசிம்மா ஆலயமும் அமைந்திருப்பதோடு, அடுக்கடுக்காக பல இடங்களும் இங்கே காணப்படுகிறது.

ககனசுக்கி – பராசுக்கி வீழ்ச்சி:

ககனசுக்கி – பராசுக்கி வீழ்ச்சி:

PC: Arnabneogi

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 136.3 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இரட்டை வீழ்ச்சியான ககனசுக்கி மற்றும் பராசுக்கி என்னும் இரண்டு முக்கிய வீழ்ச்சிகள் நீர்வீழ்ச்சியின் படைசூழ காவேரி நதியினால் உருவாகிறது. இந்த ஆற்றின் கிளைகள் இரண்டாக பிரிந்திட, அவை ஆழமான அழகிய இருப்பக்க தீவுகளை நோக்கி பாய்வதோடு குதித்து செல்லும்முன்னே இரண்டு இடங்களில் பெருமையுடன் உருவாக அதனை தான் சிவானசமுத்ராவின் ககனசுக்கி மற்றும் பராசுக்கி வீழ்ச்சி என்றழைக்கிறோம். பருவமழைக்கால நிலையில் வீழ்ச்சியை நாம் காண, அவை உருமிக்கொண்டு பாய்ந்தோடி வேகத்தின் தன்மையால் மனதில் அச்சத்தையும் தரக்கூடும் என்பதோடு, மன புத்துணர்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. இவ்வீழ்ச்சியின் அருகாமையில் கொராக்கில் சவாரி த்ரில்லர் அனுபவத்தை தர மூடுபனியில் கால்களை ஊறவைக்கிறோம்.

தலக்காடு:

தலக்காடு:

PC: Dinesh Kannambadi

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 134 கிலோமீட்டர்கள் மட்டுமே...

காவேரி ஆற்றங்கரை மணலில் கவர்ந்து காணப்படும் இவ்விடம் நாட்டுப்புறத்தை பரிந்துரை செய்கிறது. இவ்விடத்தில் முப்பது ஆலயங்கள் காணப்பட அவற்றுள் பலவும் தோண்டப்பட, அவற்றுள் சில மணலில் புதைக்கப்பட்டும் காணப்படுகிறது. இந்த வரலாற்று ஆலய நகரங்கள் பல சுவாரஸ்யமான ராஜ குடும்பத்தினர் கதைகள், சம்பவங்கள், சதித்திட்டங்கள், சாபங்கள் பற்றி சொல்கிறது. மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயமாக மங்களகரமான, அரிதான நிகழ்வாக பஞ்சலிங்க தரிசனம் காணப்பட, அது பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறையும் நிகழ்கிறது. இது ஐந்து சிவன் ஆலயங்களை பார்க்க நம்மை அழைக்க, அதன் அடையாளமாக ஐந்து அவதாரங்களும் காணப்பட, குறிப்பிட்ட நாளில், அவை நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலை குறித்தும் காணப்படுகிறது எனவும் தெரியவருகிறது.

சிவானசமுத்ரா:

சிவானசமுத்ரா:

PC: Gopala Krishna

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 135.5 கிலோமீட்டர்கள் மட்டுமே...

கர்நாடகாவின் மயக்கும் தீவு நகரத்தில் காணப்படும் பெருமைமிக்க நீர்வீழ்ச்சிதான்

இந்த சிவானசமுத்ரா ஆகும். ‘சிவாவின் கடல்' என்னும் அர்த்தத்தை தரும் சிவானசமுத்ரா, பெருமைமிக்க இரட்டை நீர்வீழ்ச்சியான ககனசுக்கி மற்றும் பராசுக்கிக்கு வீடாக விளங்குகிறது. உலகில் காணப்படும் நூறு நீர்வீழ்ச்சிகளுள் சிறந்த நிலையில் காணப்படும் இவ்வீழ்ச்சியில் நீங்கள் காவேரி நதியின் கம்பீரத்தை காண முடிய, அவள் ஆழமான அழகிய பகுதி வழியே பாய்ந்து, இங்கே விழ, இந்த நெகிழ்ச்சியடைய செய்யும் வீழ்ச்சியையும் உருவாக்குகிறாள். பழமையான ஆலயங்களும் இங்கே சிவானசமுத்ராவில் காணப்பட, வரலாற்று மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு ஏற்ற சிறந்த இடமாகவும் இவ்விடம் அமைகிறது.

மேகதாது:

மேகதாது:

PC: Abhiram

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 196 கிலோமீட்டர்கள் மட்டுமே...

விரைவாக திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலே விரைவாக புறப்படவோ இந்த மேகதாது அமைகிறது. இந்த பயணத்தில் உங்களுக்கோர் புத்துணர்ச்சி கிடைத்திட, இலக்கையும் சிறந்த நிலையில் எட்டி ரசித்திடக்கூடும். திகிலூட்டும் பாறை முகங்களையும், அற்புத அழகையும் இந்த மேகதாது கொண்டிருக்க, உங்கள் மனதை கண்டிப்பாக சுண்டி இழுக்கும் என்பதே உண்மை. காவேரி நதி... மூர்க்கப்பார்வையுடன் பாய்ந்து மேகதாதுவின் ஆழமான ஆடியை அடைய வலுவான நீரோட்டங்களை கொண்டு மேகதாது நம்மை வெகுவாக கவர்கிறது. மற்றுமோர் அமைதியான இடமாக சங்கமம் அருகில் காணப்பட, ஆர்காவதி நதியுடன், காவேரி நதி சங்கமிக்கும் இடமாகவும் இது அமைகிறது.

துரஹல்லி காடு:

துரஹல்லி காடு:

PC: Shashank Bhagat

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 21.1 கிலோமீட்டர்கள் மட்டுமே...

சில சமயங்களில் உங்கள் பின்புறத்தின் இரகசியம் மற்றும் விடுமுறை இலக்கை பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லாமல் இருந்திடக்கூடும். துரஹல்லி காடு அப்பேற்ப்பட்ட இரகசிய இடமாக அமைந்திட, பெங்களூருவிலிருந்து கல் எறியும் தூரத்தில் காணப்படும்போதிலும், பலர் பார்வைக்கு எட்டாத இடமாகவே காணப்படுகிறது. பெங்களூருவின் கடைசி வனமான இந்த வனம், கரிஷ்மா மலையையும் குறிப்பிடக்கூடியதாகும். பச்சை பசேலென்னும் பசுமை சூழ்ந்திருக்க, கண்கொள்ளா காட்சியாக அமையும் இவ்விடம், சைக்கிள் பயணத்திற்கும், பாறை பயணத்திற்கும், மலை பயணத்திற்கும், பறவை ஆர்வலர்களுக்கும், இயற்கை விரும்பிகளுக்கும், என அனைத்து தரப்பு வயதினரையும் கவரும் ஒரு இடமாக அமைகிறது.

கத்தீ சுப்பிரமணியா:

கத்தீ சுப்பிரமணியா:

PC: Akshatha Inamdar

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 61.1 கிலோமீட்டர்கள் மட்டுமே...

மலையின் உச்சியில் அமைந்திருக்கும், கத்தீ சுப்பிரமணியா முக்கியமான யாத்ரீக தளமாக அமைகிறது. வளைவான சாலைகள்... பழங்காலத்து ஆலயங்களை நோக்கி நம்மை அழைத்து செல்ல, அவை மலை உச்சியில் அமைந்து த்ரில்லர் அனுபவத்தை தருவதோடு, பைக் மற்றும் சைக்கிள் பிரியர்கள் என அனைவரையும் வெகுவாக கட்டி இழுக்கிறது. பக்தர்களை கடந்து, வரலாற்று ஆர்வலர்களும், கட்டிடக்கலை ஆர்வலர்களும் இவ்விடத்திற்கு வந்து பழங்காலத்து ஆலயத்தின் அற்புதம் கண்டு வியப்பதோடு, அவை திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்து வியந்து நிற்கின்றனர். நீங்கள் மத சார்பற்ற ஒரு நபராக இருப்பீர்களாயின், இந்த த்ரில்லர் சாலை பயணத்தில் காணும் இவ்விடம் உங்கள் நேரத்தை பொன்னானதாக மாற்றக்கூடும் என்பதோடு, அழகிய கட்டிடக்கலை மற்றும் வரலாற்றின் முக்கியத்துவம் உணர்ந்து வியப்பின் எல்லையில் பயணிக்கவும்கூடும்.

வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்கா:

வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்கா:

PC: Swaminathan

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 34.2 கிலோமீட்டர்கள் மட்டுமே...

சிரிப்பானதை தரக்கூடிய இவ்விடம் பிணைப்பையும் வலுப்படுத்தக்கூடும் - நாள் பொழுதில் உங்கள் நேரத்தை வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவில் நண்பர்களுடனும், குடும்பத்துடனும், மனம் விரும்பிய ஒரு நபருடனும் செலவு செய்ய ஏற்றதாக அமைகிறது. அன்றாட வேலை அழுத்தத்தில் உங்கள் மனமானது மிகவும் நெருக்கத்துடன் காணப்பட்டால், இவ்விடத்திற்கு வந்து லேசாக்கி செல்வது நல்லதாகும். இந்த பொழுதுப்போக்கு பூங்காவில் எண்ணற்ற பயணங்களும்,நீர் விளையாட்டுகளும், பிற விளையாட்டுகளுமென சுவாரஸ்யமூட்டும் சிறப்பம்சங்களான மாயை - நிசப்த லேசர் காட்சிகளும் காணப்படுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு சவாரிகளும் காணப்பட, நாள் முழுவதும் அனைத்து தரப்பு வயதினரையும் இவ்விடம் கட்டி ஈர்க்கிறது.

நந்தி மலை:

நந்தி மலை:

PC: Marc Dalmulder

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 61.1 கிலோமீட்டர்கள் மட்டுமே...

‘அனந்தகிரி' என்று இதனை அழைக்க, ‘மலையின் மகிழ்ச்சி' என்னும் பொருளை தருவதோடு, இந்த பழங்காலத்து மலைக்கோட்டை பெங்களூருவிற்கு அருகாமையில் காணப்பட, பெங்களூரு வாசிகளுக்கு இவ்விடம் பிடித்தமான வாரவிடுமுறை இலக்காக அமைகிறது. ஒரு சவுகரியமான பயணமாக இது அமைய, நிறை மிகுதியான மாபெரும் ஒற்றைக்கல்லும் காணப்பட, அழகிய காட்சிகளால் ஆசிர்வதிக்கப்பட்டும் இவ்விடம் காணப்படுகிறது. விரைவான பயண மற்றும் நாள் வெளியேற்றத்திற்கான இடமாக இது அமைய, குடும்பம் மற்றும் நண்பர்களுடனும் நம்மால் மன நிம்மதியை பெற முடிந்திட, நந்தி மலை, மக்கள் கூட்டமானது சூழ்ந்து எந்நேரமும் காணப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகள் அதீத அழகை தந்திடுகிறது. பல சைக்கிள் மற்றும் பைக் ஆர்வலர்களுக்கு இந்த நந்தி மலை த்ரில்லர் அனுபவத்தை தரக்கூடும்.

அவலாபெட்டா:

அவலாபெட்டா:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 92.4 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பல விதமான த்ரில்லர் இணைந்து காணப்படும் இவ்விடம், குறைவாக பார்க்கப்பட்ட ஒரு இலக்காகுமென சொல்லப்பட, அப்படியா? என நம்மை ஆச்சரியப்படவும் வைக்கிறது இவ்விடம். இந்த எண்ணத்தை உங்கள் மனதில் படரவிட்டு காரணம் தேடி அலைந்தால், அவலாபெட்டாவிற்கு வருவதன்மூலம் இவ்விடத்தின்மீது காதலும் கொள்வீர்கள். இவ்விடத்தை சுற்றி காணப்படும் இதனை ஒத்த இடங்கள் குறைவாக பிரசித்திப்பெற்றும் காணப்பட, அவலாபெட்டா உண்மையிலே நாம் பார்க்க வேண்டிய ஒரு அழகிய இடமாக இந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இவ்விடம் ஈர்க்கும் பாறைகளையும், அழகிய குட்டைகளையும், ஆலயங்களையும் கொண்டு அழகிய கண்கொள்ளா காட்சியை சுற்றுசூழல் மூலமாகவும் தருகிறது. அதோடு, இதன் சிறப்பானதோர் அங்கமாக இந்த உச்சியை ஏறும் நாம்! இதுவரை செல்லாத பயண உணர்வையும் மனதில் கொள்ளக்கூடும்.

கூர்க்:

கூர்க்:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 263.9 கிலோமீட்டர்கள் மட்டுமே...

கர்நாடகாவின் மிகவும் பார்க்கப்படும் இடங்களுள் ஒன்றாக இந்த கூர்க் காணப்பட, ‘இந்தியாவின் ஸ்காட்லாந்து' எனவும் இதனை அழைப்பதோடு, அருமையான கால நிலையையும், உயரிய மலை சிகரங்களையும், பசுமையான சரிவுகளையும், பரந்த காபி தோட்டங்களையும் இது கொண்டிருக்கிறது. வருடமுழுவதும் இவ்விடத்திற்கு நம்மால் வந்து செல்ல முடிய, ஒவ்வொரு கால நிலையிலும் இவ்விடம் தனித்தன்மை மிக்கதாய் காணப்படுகிறது. அதனால், மழையில் காதல் உணர்வை உங்களால் கொள்ளவும் முடிந்திட, வெயிலின் தணிவையும், மலையின் பனிக்கட்டி குளிரையும் வேவ்வேறு கால நிலைகளில் உங்களால் உணர முடிய, கூர்க்கில் எண்ணற்ற சாகச செயல்களும் காணப்படுவதோடு, வனவிலங்கின் வாழ்க்கை, இயற்கை, என அனைத்து விதமான பயண ஆர்வலர்களுக்கும் ஏற்ற இடமாக கூர்க் அமைகிறது.

சிக்மகளூர்:

சிக்மகளூர்:

PC: Anildesaiit

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 242.8 கிலோமீட்டர்கள் மட்டுமே...

குழப்பம் தரக்கூடிய முல்லையங்கிரியில் காணப்படும் கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான சிக்மகளூர், தென்னிந்தியாவில் காணப்படும் அழகிய இலக்குகளுள் ஒன்றாகும். அனைத்து விதமான சுற்றுலா பயணிகளுக்கும் ஏற்றதாக சிக்மகளூர் அமைய, சிறந்த கால நிலைக்கும், அதீத வனவிலங்கு வாழ்க்கைக்கும், த்ரில்லிங்கான பயணங்களுக்கும், சவாரிகளுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், காபிக்கும் என பலவித உணர்வுகளுக்கு புகழ்பெற்று இவ்விடமானது விளங்குகிறது. இவ்விடம், பிடித்தமான கோடைக்காலத்து விருப்பமாக அமைய, மற்ற இடங்களைக்காட்டிலும் இவ்விடத்தில் வெப்பமானது குறைவாகவே காணப்பட, வெயில் காலத்திலும் இங்கே வந்து செல்வதற்கு ஏதுவாகவே அமைகிறது.

வயனாடு:

வயனாடு:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 282.9 கிலோமீட்டர்கள் மட்டுமே...

எண்ணற்ற இயற்கை அழகும், கவர்ச்சிகரமான வனவிலங்கு வாழ்க்கையும், சாகச வன சவாரியும், என வயனாடு கேரளாவின் பழங்காலத்து பழங்குடியினர் இடமாக காணப்படுகிறது. இந்த சிறு மாவட்டம் குறைவாக கண்டறியப்பட்ட, அழகு நிறைந்த இடமாக கேரளாவின் மற்ற இலக்கை ஒத்த அழகுடன் காணப்படுவதால், நாடோடிப்பிரியர்களுக்கு இவ்விடம் சிறந்து அமைகிறது. பழங்காலத்து இடிபாடுகளின் வழியாக நாம் பயணிக்க, இரகசிய குகைகளும், கவர்ச்சிகரமான நீர்வீழ்ச்சியும், நெகிழச்செய்யும் சிகரங்களுமென காணப்பட, இவை பயணத்தின் நினைவுகளை மனதில் தேக்கி என்றும் அழியா சுவடாக மனதில் பதிந்துவிடுகிறது.

மசினகுடி:

மசினகுடி:

PC: Gadam Srikanth Reddy

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 249.2 கிலோமீட்டர்கள் மட்டுமே...

மைசூரு - ஊட்டி நெடுஞ்சாலையில் பரந்து விரிந்து அழகுடன் காணப்படும் இவ்விடம், ஒரு பக்கத்தில் அமைதியான முதுமலை வனவிலங்கு சரணாலயத்தையும் எல்லையாக கொண்டுள்ளதால், இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு மாசினங்குடி சிறந்த இடமாக அமைகிறது. இவ்விடம் மிகவும் பிரசித்திப்பெற்ற இடமாக அமைய, சாகச பிரியர்கள் தங்குவதற்காக காட்டில் வசதியும், மரவீடுகளும் காணப்பட, விலங்குகளோடு நாமும் தங்கி மனமகிழலாம். கூடாரமிடல், ட்ரெக்கிங்க், பறவை பார்த்தல், காடுகள் சவாரி, என பல செயல்களும் காணப்பட, அவை மாசினங்குடியின் மாபெரும் ஈர்ப்பாகவும் அமைகிறது.

பந்திப்பூர்:

பந்திப்பூர்:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 229.6 கிலோமீட்டர்கள் மட்டுமே...

யானைகள் வெறுமனே இங்கே சுற்றி அலைய, மான்களும் நாம் செல்லும்போது வழிமறைக்கக்கூடும் என்பதோடு, த்ரில்லான வனவிலங்கு வாழ்க்கை ரசனைக்கு ஏற்ற இடமாக பந்திப்பூர் அமைந்திட, இரகசிய குகைகளும் இங்கே காணப்படுகிறது. இயற்கையின் வழியே நாம் நடக்க, ஆச்சரியமூட்டும் பயணமும், வனவிலங்கு சவாரிகளும், எண்ணற்ற இயற்கை அழகுமென பந்திப்பூரில் தனியார் வேட்டை இடங்களும் காணப்பட, அது மைசூரு மஹாராஜா பயன்படுத்தியது என்றும் தெரியவருகிறது. மாபெரும் மேற்கு தொடர்ச்சியில் இது காணப்பட, பசுமையான காடுகள்... அதீத தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் வீடாக அமைகிறது. பந்திப்பூருக்கு நாம் பயணம் வருவதன்மூலமாக, மதிமயக்கும் அழகிய அனுபவத்தை மனதில் பெறலாம்.

ஊட்டி:

ஊட்டி:

PC: ChefAnwar1

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 277.7 கிலோமீட்டர்கள் மட்டுமே...

மலைப்பகுதிகளின் இராணியான உதகமண்டலத்தை ‘ஊட்டி' என நாம் அழைக்கிறோம். தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் காணப்படும் மலைப்பகுதியான இவ்விடம் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். சாலை வழியாக நீங்கள் செல்ல முடிவு செய்திருந்தால், நீலகிரி மலைகளின் சாலைகள் பாம்புபோல் வளைந்து நெளிந்து உங்களை ஆசிர்வதிப்பதோடு அழகிய காட்சிகளையும் உங்கள் கண்களுக்கு தரக்கூடும். யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமான நீலகிரி மலை இரயில்பாதை மிகவும் அழகிய இரயில்பாதை பயணமாக அமையக்கூடும். சாருக் கான் நடித்து புகழ்பெற்ற பாடலாக வெளிவந்த ‘சைய்ய சைய்யா (தைய்ய தைய்யா)' பாடல் உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? அப்பாடல், நீலகிரியின் மலை இரயில்பாதையில் தான் பதிவு செய்யப்பட்டது.

பெலூர்:

பெலூர்:

PC: Dineshkannambadi

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 220.5 கிலோமீட்டர்கள் மட்டுமே...

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சிறு நகரமான, பெலூர் பழமையான பூமியாக அரசர்களையும், ராஜ்ஜியத்தையும், அற்புதமான ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. யாச்சி நதியின் ஆற்றங்கரையில் இது அமைந்திருக்க, ஹொய்சாலா வம்சத்தின் பழமையான தலைநகரமாக இது காணப்படுகிறது. சிறந்த கலை மற்றும் கட்டிடக்கலை காதலுக்கு பெயர் பெற்ற இந்த ஹொய்சாலா, ஆலயங்களையும், நினைவு சின்னங்களையும் பிரித்தே கட்டப்பட்டு காணப்படுகிறது. இந்த ஆலயங்கள் கலை மற்றும் கட்டிடக்கலையின் சிறந்த வேலைப்பாடுகளை உங்களுடைய கண்களுக்கு உன்னத விருந்தாய் படைத்திடுகிறது. பெலூருக்கு வரும் நாம், மீண்டும் வரவேண்டும் என்னும் ஆசையை தூண்டும் கடந்து காலத்து வரலாற்றை கண்டு வியப்பில் நிற்கக்கூடும்.

ஹலேபிடு:

ஹலேபிடு:

PC: Bikashrd

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 210.2 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பெலூரின் இரட்டை நகரமான ஹலேபிடு, சரிசமமான சுவாரஸ்யங்களை கொண்டு நம்மை வரவேற்க, குறிப்பாக வரலாறு, கலை மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு இவ்விடம் சிறப்பாக அமையக்கூடும். இவ்விடத்தின் ஓர் ஈர்ப்பாக ஆலயங்களும், நினைவு சின்னங்களும் காணப்பட, சுவற்றில் அழகிய வளி மண்டல சிற்பங்களும் அழகுபடுத்தப்பட்டிருக்க, காலவரையற்ற அழகை கொண்ட சாந்தலா தேவிக்கு அஞ்சலி செலுத்தும் இடம் அது என நம்பப்பட, விஷ்ணுவர்தன அரசரின் இராணி அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் ஆலயங்களும், நினைவு சின்னங்களும் தனித்துவமிக்க கதைகள் சொல்ல, அவை அமைப்புகளின் கற்களிலும் காணப்படுகிறது. ஹலேபிடுவிற்கு பயணம் வருவதன் மூலமாக, புதியதோர் ஆன்மீக மற்றும் கட்டிடக்கலை இரத்திணங்கள் அடங்கிய பகுதியில் காலடி வைப்பதோர் உணர்வினையும் உங்கள் மனதில் கொள்ளக்கூடும்.

ஹம்பி:

ஹம்பி:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 343.4 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பாரம்பரியத்தின் நிலமான கர்நாடகா, பல வரலாற்று தளங்களின் வீடாகவும் காணப்பட, அவை இடிபட்ட நிலையில் கடந்த காலத்து கதைகளை சுவாரஸ்யமாக திரும்ப பேச நம்மை அழைக்கிறது. இந்தியாவின் யுனொஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுள் ஒன்றாக இது காணப்பட, ஹம்பி., விஜய நகர பேரரசின் முந்தைய தலைநகரமாகவும் விளங்கியது. புகழ்பெற்ற, அதீத வரலாற்றை கொண்டு இந்த அரசு, தற்போது இடிபட்ட நிலையில் மாபெரும் நினைவு சின்னங்களையும், அமைப்புகளையும், தாங்கிக்கொண்டு அப்பகுதியில் நிற்கிறது. இந்த இடிபட்ட நகரத்திற்கு நாம் பயணம் வருவதன் மூலமாக கடந்த காலத்து வரலாற்றை நோக்கி பயணித்து புதியதோர் அனுபவத்தையும் கொள்ளலாம்.

ஏற்காடு:

ஏற்காடு:

PC: Thangaraj Kumaravel

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 216 கிலோமீட்டர்கள் மட்டுமே...

அழகிய மலைப்பகுதியான ஏற்காடு, கிழக்கு தொடர்ச்சியின் சேவராய் மலைப்பகுதியில் குழப்பம் தரும் வகையில் காணப்பட, உங்களுடைய மனம் விரும்பும் ஒரு நபருடன் வந்து செல்ல ஏற்ற இடமாக அமைகிறது. இவ்விடத்தின் கால நிலையானது சிறந்து காணப்பட, அமைதியான காட்சிகளும், அழகிய நிலப்பரப்பும் நம் கண்களை வெகுவாக கவர்ந்திட, தென்னிந்தியாவில் காணப்படும் பிரசித்திப்பெற்ற காதல் பகுதிகளுள் ஏற்காடும் ஒன்றாக அமையக்கூடும். ‘தெற்கின் ஆபரணம்' என இவ்விடத்தை நாம் அழைக்க, ஏற்காடின் மற்றுமோர் சிறப்பம்சமாக பெரிய அளவிலான மரகத ஏரி அமைய, இயற்கை ஏரியாகவும் பசுமையான புல்வெளிகளை மலைகளில் சூழ்ந்தும் இவ்விடமானது காணப்படுகிறது. இந்த மயக்கும் மலைப்பகுதிக்கு நீங்கள் உங்களுடைய மனம் விரும்பிய நபருடன் வருவதன் மூலமாக அமைதியான, காதல் மன நிலையையும் மனதில் கொண்டு நினைவை தேக்கி திரும்பக்கூடும்.

ஏலகிரி மலை:

ஏலகிரி மலை:

PC: Solarisgirl

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 160.6 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பயண மற்றும் சாகச ஆர்வலர்களுக்கான மிகவும் பிரசித்திப்பெற்ற இலக்காக, ஏலகிரி அமைய, பொதுவாக அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக எதாவது ஒன்று அனைவரையும் கட்டி ஈர்க்கிறது. கிழக்கு தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமர்ந்து, எண்ணற்ற இயற்கை அழகை கொண்டு சூழ்ந்துள்ள இவ்விடம், தமிழ்நாட்டின் மலைப்பகுதியாகும். தெற்கில் உள்ள மற்ற மலைகள் பிரசித்திப்பெற்று காணப்படவில்லை என்றாலும், ஏலகிரி உங்களுடைய சுற்றுலா இலக்கு பட்டியலில் மெதுவான தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்திடக்கூடும். நீங்கள் சாகச செயல் மற்றும் விளையாட்டுக்களான ட்ரெக்கிங்க், பாராகிளைடிங்க், மற்றும் பாறை ஏறுதல் போன்றவற்றின் மூலமாக ஏலகிரியை கொண்டாட, அதோடு வெறுமனே அமர்ந்து இயற்கையை ரசிப்பதன்மூலமாக அழகிய உணர்வையும் மனதில் கொள்ளக்கூடும்.

மந்தர்கிரி மலை:

மந்தர்கிரி மலை:

PC: Sagar Sakre

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 62.5 கிலோமீட்டர்கள் மட்டுமே...

ஓர் விரைவான இடைவெளி உங்களுக்கு வேண்டுமா? தூய்மையான காற்றை சுவாசித்து பெருமூச்செறிந்து பார்க்க, நுரையீரலும் புத்துணர்வு பெற வேண்டுமா? ஆனால், அதற்காக வெகு தூரம் செல்லவும் நீங்கள் தயாராக இல்லையா? அமைதியான ஒரு இடம் வேண்டுமா? கவலை வேண்டாம், நாங்கள் உங்களுக்கான ஓர் இடத்தை இதோ காண்பிக்கிறோம் - பெங்களூரு நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர்கள் தூரத்தில் காணப்படும் இவ்விடம் அனைத்து விதமான சவுகரியங்களையும் கொண்டு உங்களுக்காக காத்திருக்கிறது. இவ்விடத்தை நீங்கள் விரும்பினால், பலராலும் கண்டிராத மந்த்ர்கிரி பலவித புதிய அனுபவங்களை தரக்கூடும். குறைவான கூட்டமும், மாசற்ற இடமுமாக இது காணப்பட அழகிய மலைக்குன்றுகளையும், கற்பாறைகளையும் கொண்டு இது சூழ்ந்துள்ளது. இந்த அழகிய இடத்திற்கு நீங்கள் வருவதன் மூலமாக, புதியதோர் அனுபவத்தை மனதில் கொண்டு நிம்மதியாகவும் திரும்பிடவும்கூடும்.

ஷ்ரவனபெலாகோபாலா:

ஷ்ரவனபெலாகோபாலா:

PC: Ananth H V

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 143 கிலோமீட்டர்கள் மட்டுமே...

ஜெய்ன் யாத்ரீகத்தின் பிரசித்திபெற்ற இடமான ஷ்ரவனபெலாகோபாலா, கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையைக்கொண்டு கம்பீரமாக காணப்படுகிறது. இவ்விடம் உலகிலேயே பெரும் ஒற்றைக்கல் சிலையைக்கொண்டிருக்க அது கோமதேஷ்வரா அல்லது பாகுபலிக்காக ஜெய்னா குறிப்பிடுவன எனவும் தெரியவருகிறது. ஷ்ரவனபெலாகோபாலா, பல அழகிய ஆலயங்களுக்கும், சன்னதி அமைப்புகளுக்கும் வீடாக விளங்க, அதனை ‘பாசடி' எனவும் அழைக்கின்றனர். இங்கே காணும் கலை, கட்டிடக்கலை, வரலாற்றினை உற்று நோக்கும் உங்களுடைய கண்கள், ஷ்ரவனபெலாகோபாலாவிற்கு வருவதன் பெருமையையும் உணரக்கூடும்.

நாகர்ஹோல்:

நாகர்ஹோல்:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 226.2 கிலோமீட்டர்கள் மட்டுமே...

அதீத தாவரங்களும், விலங்குகளுமென, எண்ணற்ற இயற்கை அழகை கொண்டிருப்பதோடு, அதீத சிறந்த கால நிலையையும் கொண்டிருக்கும் நாகர்ஹோல், வனவிலங்கு பிரியர்களுக்கு ஏற்ற அல்டிமேட் இடமாக அமையக்கூடும். ஹாட்டான பல்லுயிரையும், பசுமையான காடுகளையும், பசுமையான பள்ளத்தாக்குகளையும், மலைகளையும், நீர்வீழ்ச்சிகளையும், ஓடைகளையும் நாகர்ஹோல் தேசிய பூங்கா கொண்டிருக்க, இவை நீலகிரி உயிர்கோள பாதுகாப்பின் ஒரு அங்கமாகவும் திகழ்வதோடு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் அதே நேரத்தில் காணப்படுகிறது. வனவிலங்கு ஆர்வலர்கள் அல்லது புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாக இவ்விடம் அமைய, பயணம் மீது காதல் கொண்டு நாகர்ஹோலை அடைவதோடு மனதையும் நிம்மதியின் வழியே வருபவர்கள் பயணிக்க செய்கின்றனர்.

கபினி:

கபினி:

PC: Pradipta Majumder

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 215 கிலோமீட்டர்கள் மட்டுமே...

மனதை மயக்கும் அழகிய காட்சிகள், அதீத வனவிலங்கு வாழ்க்கை மற்றும் எண்ணற்ற இயற்கை அழகென காணப்படும் காபினி, அமைதி மற்றும் உன்னத உணர்வை மனதில் நாடுவோருக்கு சிறந்த இடமாக அமைகிறது. ஆங்கிலேயர்களின் வேட்டை நிலமானது இங்கே காணப்பட, காபினி வனவிலங்கு பாதுகாப்பானது நாகர்ஹோல் காடுகளின் ஒரு அங்கமாகவும் விளங்க, சுற்றுலா பயணிகள், புகைப்பட ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்களுக்கு பிரசித்திப்பெற்ற இலக்காக இது அமைகிறது. மேலும், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், தெறிக்கும் நீரோடைகள், மிளிரும் ஏரிகள் என காணப்படும் இவ்விடம், விடுமுறையின் ஓய்வுக்கேற்ற சிறந்த இடமாகவும் அமைகிறது. அதோடு, சாகச அத்மாக்களுக்கான அனைத்து விதமான காட்டு சவாரி, யானை சவாரி, ட்ரெக்கிங்க், படகு சவாரி, சைக்கிள் பயணம், இயற்கை நடைப்பயணம், பறவை பார்த்தல், வனவிலங்கு புகைப்பட ஆர்வம் என பலவும் இங்கே காணப்படுவதால் நம் மனமானது இதமானதோர் உணர்வினை கொள்ளக்கூடும்.

பத்ரா வனவிலங்கு சரணாலயம்:

பத்ரா வனவிலங்கு சரணாலயம்:

PC: Girish

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 293.5 கிலோமீட்டர்கள் மட்டுமே...

கர்நாடகாவின் இரண்டு பிரசித்திப்பெற்ற விடுமுறை இலக்கான சிக்மகளூர் மற்றும் ஷிமோகாவிற்கு இடைப்பட்ட பகுதியில் மேற்கு தொடர்ச்சியில் காணப்படும் பசுமையான புல்வெளி சூழ்ந்த அழகிய இடம் தான் பத்ரா வனவிலங்கு சரணாலயம். இதனை ‘முத்தோடி வனவிலங்கு சரணாலயம்' எனவும் அழைக்க, இந்த வனம் அதீத புலி இனத்தை கொண்டிருக்கிறது. காடுகளை சுற்றும் ஆர்வலர்களுக்கு இந்த காடானது த்ரில்லர் பயணமாக அமையக்கூடும். இந்த வன அலுவலகத்தின் அருகாமையில் ஒரு சிறிய அருங்காட்சியகமானது காணப்பட, அங்கே எண்ணற்ற வனவிலங்கினத்தின் தகவலை நாம் தெரிந்துக்கொள்ள உதவுகிறது. ஓர் அழகிய பத்ரா நதியானது அருகில் பாய்ந்தோட, அங்கிருந்து நாம் உணரும் காடுகளின் சத்தமும் மனதை துள்ளிக் குதிக்க வைத்திடக்கூடும்.

டி. நரசிப்புரா:

டி. நரசிப்புரா:

PC: Dimple Bheemani

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 141.7 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இதனை ‘தக்ஷின் காஷி' என்றும் அழைக்கப்பட, திருமக்குடலு நரசிப்புரா அல்லது T. நரசிப்புரா என்றும் அழைப்பதோடு மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தளமாகவும், யாத்ரீக இலக்காகவும் அமைகிறது. இவ்விடம் மிகவும் பயம் தரக்கூடிய நகரமாக அமைய, இவ்விடம் நிலத்தில் சங்கமமாக அமைந்து, மூன்று புனித நீர் நிலைகளை சங்கமிக்கும் இதிகாச ஏரியாக அமைகிறது. இவ்விடத்தின் ஆணி வேறாக பல புராணக்கதைகள் காணப்பட, இதிகாச அத்தியாயங்களும் நம் மனதில் சுவாரஸ்யத்தை தருகிறது. இந்த நகரத்தில் பழமைவாய்ந்த அரச மரம் காணப்பட, அவை 2000 வருடங்களுக்கும் பழமை வாய்ந்து, மனதினை மகிழ்விக்கும் மரமெனவும் நம்பப்படுகிறது. T. நரசிப்புரா நோக்கிய சாலைப்பயணம் மிகவும் சிறப்பான பயணமாகவும் நமக்கு அமையக்கூடும்.

ஷிமோகா:

ஷிமோகா:

PC: Koffee18

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 310.8 கிலோமீட்டர்கள் மட்டுமே...

நாட்டின் இரண்டாவது உயரமான சரிவு நீர்வீழ்ச்சியாக இது காணப்பட - இந்த ஜாக் ஷிமோகாவை ‘ஷிவமோகா' என்றும் அழைப்பதோடு, துங்கா நதியின் ஆற்றங்கரையில் இது காணப்படுகிறது. இந்த நகரமானது மேற்கு தொடர்ச்சியின் மலைப்பகுதியில் காணப்பட, இதன் புனைப்பெயராக ‘மால்னாடின் நுழைவாயில்' என்றும் ‘பூமியின் சொர்க்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒத்த நிலை கொள்ளாத அழகும், கண்கொள்ளா காட்சியும் நம் மனதை இதமாக்க, கர்நாடகாவின் மாபெரும் சுற்றுலா இலக்குகளுள் ஒன்றாக இந்த ஷிவ்மோகா காணப்படுகிறது.

தீர்த்தஹல்லி:

தீர்த்தஹல்லி:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 346.2 கிலோமீட்டர்கள் மட்டுமே...

துங்கா நதியின் ஆற்றங்கரையில் இது காணப்பட, ஷிமோகா மாவட்டத்தில் காணும் அழகிய நகரம் தான் இந்த தீர்த்தஹல்லியாகும். அடர்த்தியான, பசுமையான காடுகள் மேற்கு தொடர்ச்சியில் சூழ்ந்திருக்க, இவ்விடம் விடுமுறைக்கு ஏற்ற குறைவாக பார்க்கப்பட்ட ஒரு இடமாகவும் அமைகிறது. காதல் கொள்ளத்தூண்டும் ஒரு பயணமாக இது அமைய, அழகிய காட்சிகளுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாக தீர்த்தஹல்லி காணப்படுகிறது. தனிமையை விரும்புபவர்களுக்கும், அமைதியை விரும்புபவர்களுக்கும் சிறந்த தேர்வாக இவ்விடம் அமைய, மனதை புத்துணர்ச்சிக்கொள்ள செய்வதோடு இதமாக வைத்துக்கொள்ளவும் நமக்கு இவ்விடம் உதவக்கூடும்.

டன்டேலி:

டன்டேலி:

PC: Rishikesh454

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 461.9 கிலோமீட்டர்கள் மட்டுமே...

வடக்கு கர்நாடகாவின் ஒரு புலத்தை தொட்ட இடமான டன்டேலி, அனைத்துவித சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடமாக அமைகிறது. இங்கே முழுவதும் அடர்ந்த காடுகளும், அழகிய இடங்களும், பள்ளத்தாக்குகளும், கர்ஜிக்கும் காளி நதியுமென காணப்படுகிறது. சாகச ஆத்மாக்களுக்கு ஏற்ற இடமாக டென்டேலி காணப்பட, மெக்கா பயணமும் இங்கே பிரசித்திப்பெற்று காணப்படுகிறது. வெள்ளை நீர் படகு சவாரி, ட்ரெக்கிங்க், கூடாரமிடல், கயாகிங்க், படகு வலித்தல் போட்டி, காட்டு சவாரி, ரெப்பெலிங்க் என பெயர் பெற்று விளங்குகிறது இந்த டன்டெலி. இந்த அடர்ந்த காடானது த்ரில்லை சேர்க்க, கர்நாடகாவின் இரண்டாவது பெரிய வனவிலங்கு சரணாலயமும் இங்கே காணப்படுகிறது. கோவா எல்லைக்கு அருகாமையில் இது காணப்பட, மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் டன்டேலிக்கு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோகர்னா:

கோகர்னா:

PC: Sudhakarbichali

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 484.6 கிலோமீட்டர்கள் மட்டுமே...

ஒருகாலத்தில் முக்கியமான ஆலய நகரமாக இந்த கொகர்னா காணப்பட, கோவாவின் லீக் போட்டியை தொடர்ந்து அதன்பின்னர் கடற்கரையையும் இலக்காக கொண்டது. இங்கே அழகிய கடற்கரையும், அமைதியான நிலப்பரப்பும், சிறந்த உணவும், சாகசங்களும் காணப்பட, கொகர்னா., பயண ஆர்வலர்கள், மூட்டை முடிச்சுடன் புறப்படும் பிரியர்கள், கடற்கரை விரும்பிகள் மற்றும் ஹிப்பிகளுக்கு ஏற்ற மையமாகவும் உலகிலேயே சிறந்து அமைகிறது. கொகர்னாவில் தனித்தன்மை வாய்ந்த ஆலயங்களும், கடற்கரைகளுடம் காணப்பட அவை மனதில் அமைதியையும், உன்னத உணர்வையும், குறும்புத்தனத்தையும், சாகசத்தையும் அதே நேரத்தில் தருகிறது. விடுமுறையின் போது குளுமையான கடற்கரை விளையாட்டை கொண்டு உங்கள் மனதை மகிழ்விக்க நீங்கள் எண்ணினால் அதற்கு இவ்விடம் சிறப்பாக அமைவதோடு, ஆனாலும், கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

துத்சாகர் வீழ்ச்சி:

துத்சாகர் வீழ்ச்சி:

PC: wonker

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 547.8 கிலோமீட்டர்கள் மட்டுமே...

சாகச மற்றும் பயண பிரியர்களுக்கு பிடித்தமான இலக்காக இந்த துத்சாகர் நீர்வீழ்ச்சி அமைகிறது. இவ்வீழ்ச்சிக்கு நாம் வரும் பயணமானது மனதில் ஒரு வித த்ரில்லர் அனுபவத்தை தரக்கூடும். மன்டோவி நதியில் இது அமைந்திருக்க, நான்கு தரத்து நீர்வீழ்ச்சியை கொண்டு கோவா மற்றும் கர்நாடகாவை எல்லைகளாகவும் கொண்டுள்ளது. 1017அடி உயரத்தில் இது விழ, மரகத வனத்தையும் மலையையும் சூழ்ந்து காணப்பட, இந்த பெருமைமிக்க நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியை மனதில் தரக்கூடும்.

சகரா:

சகரா:

PC: Sarthak Banerjee

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 401.4 கிலோமீட்டர்கள் மட்டுமே...

அமைதியான மேற்கு தொடர்ச்சியின் மத்தியில் ஷிமோகா மாவட்டத்தில் இது அமைந்திருக்க, பயண ஆர்வலர்களுக்கான விடுமுறை இலக்காக இந்த சகரா அமைகிறது. பிரசித்திப்பெற்ற ஜோக் வீழ்ச்சி முப்பது கிலோமீட்டர் தொலைவில் காணப்பட, சில அழகிய இடங்களான இக்கெரி மற்றும் கேலடிக்கு சகரா வீடாக விளங்கிட, இவை வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அழகிய ஹென்னேமர்து சராவதி நதிக்கு உப்பங்கழியாக அமைந்திருக்க, அங்கிருந்து நகரமானது இருப்பத்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது.

யானா:

யானா:

PC: Srinivas G

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 457.4 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பசுமையான, பசுமைமாறா காடுகளை மேற்கு தொடர்ச்சியில் கொண்டிருக்கும் யானா, எண்ணற்ற இயற்கை மற்றும் அழகு நிறைந்து காணப்படுகிறது. இங்கே கிராமமானது காடுகளை நோக்கி குழப்பத்துடன் காணப்பட, அசாதாரண கர்ஸ்ட் ராக் அமைப்புக்கு பிரசித்திப்பெற்று இவ்விடம் காணப்படுகிறது. அடர்ந்த காடுகளும், ஓடைகளும் சூழ்ந்திருக்க, இரு ஒற்றைகல்லானது சுற்றுப்புறத்தில் காணப்பட, ஒட்டுமொத்த நிலப்பரப்பும் அழகிய காட்சிகளை நமக்கு தருகிறது. அதனால், இந்தியானா ஜோன்ஸின் அவதாரை கண்டு ஆராய்ந்து, தனித்தன்மைக்கொண்ட பாறை அமைப்புகளையும், யானா குகைகளையும் பார்த்து வியப்பின் எல்லையில் பயணித்து மகிழுங்களேன்.

சிர்ஸி:

சிர்ஸி:

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 404.8 கிலோமீட்டர்கள் மட்டுமே...

மேற்கு தொடர்ச்சியின் இதயமாக காணப்படும் நகரமான சிர்ஸி, வட கர்நாடகாவில் அமைந்து அழகிய காட்சியை நமக்கு தருகிறது. பசுமையான காடுகள் சூழ்ந்து காணப்படும் இவ்விடம், எண்ணற்ற அழகிய இடங்களுக்கும், நெகிழ செய்யும் நீர்வீழ்ச்சிக்கும் வீடாக காணப்படுகிறது. இயற்கை அழகு பொதிந்து கிடக்கும் இவ்விடம், பார்ப்பதற்கு பல இடங்களை கொண்டிருப்பதோடு ட்ரெக்கிங்க், குகை ஆராய்ச்சி, இயற்கை நடை பயணம், நீர்வீழ்ச்சியெனவும் கொண்டிருக்க, இந்த பகுதி, வாசனை பொருட்களான ஏலக்காய், மிளகு, மற்றும் வன்னிலாவுக்கு பிரசித்திப்பெற்றும் விளங்குகிறது. அதோடு, இந்த நகரமானது அழகிய ஆலயங்களுக்கும் புகழ்பெற்று விளங்குகிறது.

புத்தூர்:

புத்தூர்:

PC: Vinay Bhat

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 309.3 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இவ்விடத்தின் பெயருக்கான கன்னட வார்த்தையாக ‘முத்து' என பொருள் தர, அப்பெயருக்கு ஏற்றவாறு இந்த அமைதியான நகரமும் விடுமுறைக்கேற்ற, குறைவாக பார்க்கப்பட்ட, குறைவாக வந்து செல்லும் நகரமாகவும் இருக்கிறது. இருப்பினும், இவ்விடம் பயண ஆர்வலர்களுக்கு உன்னதமான முத்தாக அமைய - ஏராளமான ஆலயங்கள் காணப்படுவதோடு அவற்றிற்கான வரலாற்று கதைகளும் சுவாரஸ்யமாக அமையக்கூடும். அதீத பாரம்பரியத்திற்கும், கர்நாடகாவின் கலாச்சாரத்துக்கும் புத்தூர் முக்கியமாக காணப்படுகிறது. இவ்வழியாக ஒரு நீண்ட நெடிய பயணம் நாம் வர, பல அழகிய காட்சிகளை கண்டு விடுமுறையை சிறப்புடன் கொண்டு சென்று உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கிறோம்.

கொடசத்ரி:

கொடசத்ரி:

PC: Ashwin Iyer

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 442.6 கிலோமீட்டர்கள் மட்டுமே...

மேற்கு தொடர்ச்சியின் இதயமாக அடர்ந்த காடு காணப்பட, கொடசத்ரி மிளிரும் இரத்தின சிகரமாகும். கர்நாடகாவின் பத்தாவது உயரமான சிகரமாக இது காணப்பட, கர்நாடக அரசால் ‘இயற்கை பாரம்பரிய தளமாகவும்' அறிவிக்கப்பட்டது. எண்ணற்ற இயற்கை அழகை கொண்டிருக்கும் இவ்விடம், பரந்த மரகத பள்ளத்தாக்கையும், பெருமைமிக்க நீர்வீழ்ச்சியையும், திகிலூட்டும் நிலப்பரப்பையும், அதீத தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டிருக்க, மேற்கு தொடர்ச்சியின் மிகவும் பிரசித்திப்பெற்ற பயணம் இதுவென்பதும் தெரியவருகிறது. அதனால், சவால்களை எதிர்க்கொள்ளும் ஆர்வலர்களுக்கு ஏற்றதாக இந்த பயணம் அமைய, பயணத்திற்கு ஏற்ற காலணிகளும், இந்த திகிலூட்டும் சிகரத்தில் ஏற தேவைப்படுகிறது.

சிருங்கேரி:

சிருங்கேரி:

PC: Ashok Prabhakaran

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 328.5 கிலோமீட்டர்கள் மட்டுமே...

துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் சிருங்கேரி, கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் காணப்படும் ஆலய நகரமாகும். இவ்விடத்தின் பெரும் ஈர்ப்பாக சிருங்கேரி மடம் காணப்பட, அது பிரசித்திப்பெற்ற யாத்ரீக தளமெனவும் தெரியவருகிறது. மேலும் இவ்விடம், எண்ணற்ற அழகிய மற்றும் பழமையான ஆலயங்களுக்கு பிரசித்திப்பெற்று விளங்க, இங்கே சில சுவாரஸ்யமான கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்புகளும் காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சியின் எல்லையாக சிருங்கேரி காணப்பட, இதன் சுற்றுப்புற பள்ளத்தாக்குகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் நம் மனதை இதமாக்குகிறது. இங்கிருந்து ஜோக் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஒரு குழியும் காணப்படுகிறது.

குக்கே சுப்பிரமணியா:

குக்கே சுப்பிரமணியா:

PC: Karthick Siva

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 280.4 கிலோமீட்டர்கள் மட்டுமே...

தக்ஷின் கன்னடா மாவட்டத்தின், சுப்பிரமணிய நகரத்தில் காணப்படும் குக்கே சுப்பிரமணிய சுவாமி, அனைத்து வித நாக தெய்வங்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பிரசித்திப்பெற்ற ஆலயமாகும். ஆம், சிவபெருமானின் மகனான சுப்பிரமணியருக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது. இந்த ஆலயத்தின் கட்டிடக்கலை மற்றும் புராணங்கள் சுவாரஸ்யத்தை மனதில் தர, இவற்றிற்கு ஆணி வேராக இந்து இதிகாசம் காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சியில் இந்த நகரமானது காணப்பட, இதன் பின்புலத்தில் அடர்த்தியான பசுமைமாறா காடுகளும், எழில்மிகு குமரபர்வதமும் காணப்பட - தென்னிந்தியாவின் பிரசித்திப்பெற்ற பயண இலக்குகளுள் இதுவும் ஒன்றென தெரியவருகிறது.

தர்மஸ்தலா:

தர்மஸ்தலா:

PC: Official Site

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 297.7 கிலோமீட்டர்கள் மட்டுமே...

கர்நாடகாவின் தக்ஷினா கன்னடா மாவட்டத்தின் நேத்ரவதி நதி ஆற்றங்கரையில் காணப்படும் ஆலய நகரமான தர்மஸ்தலா, 800 வருடங்களை கடந்த பழமையான சிவனுக்கான யாத்ரீக தளமாகும். நீங்கள் மத சார்பற்ற ஒரு நபராக இருந்தாலும், இம்மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமையை தெரிந்துக்கொள்வதற்காக இந்த தர்மஸ்தாலாவிற்கு வரக்கூடும். இங்கே காணப்படும் கடவுளின் அவதாரங்கள் மிகவும் அரிதான தனித்துவமிக்கதாய் காணப்பட, குறிப்பாக இங்கே அருங்காட்சியகத்தில் காணப்படும் பழமை வாய்ந்த கார்கள் நம்மை வியப்பில் தள்ளி எல்லையில் பயணிக்க வைத்திடவும் கூடும்.

மங்களூரு:

மங்களூரு:

PC: Tarique

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 351.6 கிலோமீட்டர்கள் மட்டுமே...

அரபிக்கடலுக்கும் மேற்கு தொடர்ச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் அழகிய கடற்கரை பகுதியான மங்களூரு, மிகவும் பிரசித்திப்பெற்ற கடற்கரை இலக்காகும். ஏராளமான கடற்கரைகள் காணப்பட, கண்கொள்ளா காட்சியாக சூரிய உதயம் அமைந்திட, கடற்கரை விரும்பிகளுக்கு மங்களூரு சொர்க்கமாகும். எண்ணற்ற பழங்காலத்து ஆலயங்களும், பழமையான தேவாலயங்களும் இவ்விடத்தை புகழி(லி)டமாக கொண்டிருக்க, மிகவும் பிரசித்திப்பெற்ற காத்ரி மஞ்சுநாத் ஆலயமும் இங்கே காணப்படுகிறது. உணவு பிரியர்களுக்கு எதாவது ஸ்பெசலாக கிடைக்க, இங்கே காணப்படும் கடற்கரைகள் உணவுக்கான இலக்காய் அமைந்திட, காபி, முந்திரி, சுவையூட்டும் உணவுகளும் கிடைக்கிறது.

உடுப்பி:

உடுப்பி:

PC: Magiceye

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 403 கிலோமீட்டர்கள் மட்டுமே...

இந்த கொங்கனி நகரம், அழகிய கடற்கரைக்கும், ஈர்க்கத்துடிக்கும் ஆலயங்களுக்கும் பிரசித்திப்பெற்று காணப்படுகிறது. கம்பீரமான மேற்கு தொடர்ச்சி மலைக்கும், பரந்து விரிந்த அரபிக்கடலுக்கும் இடையே தழுவிக்காணப்படும் இவ்விடம், புராணங்களின் ஆசிர்வாதம் கொண்டும், எண்ணற்ற இயற்கை அழகை கொண்டும் நம் மனதை வருடுகிறது. இவ்விடம் மிகவும் பிரசித்திப்பெற்ற கிருஷ்ண ஆலயத்தை கொண்டு சுவாரஸ்யமான புராண கதைகளை கூறுகிறது. இந்த அமைதியான கடற்கரை, உங்களுடைய அழுத்த நிலையை குறைக்க உதவுகிறது. மால்பே கடற்கரை, புகைப்பட ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக விளங்க, சூரிய அஸ்தமனத்தின் போது வானத்தின் பின்புலத்து சைன்ட் மாரி தீவின் அழகையும் நம் கண்களுக்கு விருந்தாக படைத்திட, இவ்விடம் தான் வாஸ்கோடகாமாவின் பயணத்தின்போது இந்தியாவில் முதன்முதலில் காலடி பதித்த இடமெனவும் நம்பப்படுகிறது.

லெபாக்ஷி:

லெபாக்ஷி:

PC: Narasimha Prakash

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 122.7 கிலோமீட்டர்கள் மட்டுமே...

பழங்காலத்து தொன்மங்களையும், ஒற்றைக்கல்லையும் லெபாக்ஷியில் நாம் கண்டுபிடித்திட, பெங்களூருவிலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவில், ஆந்திர பிரதேசத்தின் அனந்தபுரி மாவட்டத்தில் காணப்படும் ஓர் கிராமம் இது என்பது தெரியவருகிறது. இங்கே காணப்படும் ஆலயங்களும், அமைப்புகளும் சிறந்த கலை மற்றும் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுவதோடு விஜய நகர பேரரசின் வரலாற்றையும் நினைவுப்படுத்துகிறது. லெபாக்ஷி ஆலயம் மற்றும் மாபெரும் ஒற்றைக்கல் அமைப்புக்கொண்ட நந்தி என கர்நாடகாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமைகளுள் எதாவது ஒன்றை காண நம் மனமானது விரும்பக்கூடும். இந்த தொல்லியல் அற்புதங்கள் யாவும் இந்தியாவின் தொல்பொருள் துறைக்கு கீழ் பராமரிக்கப்பட்டு பிரசித்திப்பெற்று காணப்படுகிறது. இந்த நினைவு சின்னங்கள், கடந்த காலத்து வரலாற்றையும், கலை மற்றும் கட்டிடக்கலை பற்றி நமக்கு உணர்த்த, கட்டிடக்கலை மற்றும் பயண ஆர்வலர்கள் வருடந்தோரும் இங்கே வந்து செல்கின்றனர்.

மேல்கோட்டே:

மேல்கோட்டே:

PC: Bikashrd

பெங்களூருவிலிருந்து செல்ல வேண்டிய தூரம்: 148 கிலோமீட்டர்கள் மட்டுமே...

மைசூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பாரம்பரிய நகரம் தான் மேல்கோட்டே. ஏராளமான அழகிய கட்டமைக்கப்பட்ட ஆலயங்கள் காணப்பட, அவை வரலாற்றின் பெருமையை தாங்கிக்கொண்டு நகரம் முழுவதும் பரந்து காணப்படுகிறது. மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக செளுவா நாராயண ஆலயமும், யோகா நரசிம்ம ஆலயமும் காணப்பட, யாதுரி மலைமீது அமைந்து இவை அழகிய காட்சியை நமக்கு தருகிறது. மேல்கோட்டே வனவிலங்கு சரணாலயம் மற்றுமோர் முக்கிய இடமாக காணப்பட, அதோடு இணைந்து பல விலங்குகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் இந்த சரணாலயம் 200 வகையான பறவைகளுக்கு வீடாக விளங்க, பறவை ஆர்வலர்களுக்கு இவ்விடம் சொர்க்கமாக அமையக்கூடும்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more