Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம்

பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம், பெங்களூர்

212

பெங்களூர் நகர மையப்பகுதியிலிருந்து 40 கி.மீ தூரத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமான நிலையமாக அறியப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேவைகளின் முக்கிய கேந்திரமாகவும் இது விளங்குகிறது.

 

10 உள்நாட்டு சேவைகளையும் 21 வெளிநாட்டு சேவைகளையும் இந்த விமான நிலையம் பெற்றுள்ளது. இதன் மூலம் மற்ற இந்திய நகரங்களுடனும் வெளி நாட்டு நகரங்களுடனும் இது நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நிறுவனமான ‘சீமன்ஸ்’ கம்பெனியும் கர்நாடக மாநில அரசும் இணைந்து உருவாக்கியுள்ள விமான நிலையம் வருடம் முழுவதும் 120 லட்சம் பயணிகளை கையாளும் சக்தியுடன் உள்ளது.

ரயில் நிலையத்துக்கும் பஸ்  நிலையத்துக்கும் அருகிலேயே இந்த விமான நிலையம் இருந்தாலும் விமான நிலையத்துக்குள்ளேயே  ஒரு ரயில் நிலைய இணைப்பை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலை முன்னரே அகலப்படுத்தப்பட்டு ஆறு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

71,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ள இந்த விமான நிலையம் நான்கு அடுக்குகளில் முழுதும் குளிர் வசதி செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான் பயணிகள் பகுதியை கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்திலுள்ள மற்றொரு விசேஷம் இதில் ஹஜ் பயணிகளுக்கு சேவைகளை தருவதற்கென்று ஒரு தனிப்பிரிவை 1500 சதுர மீட்டர் பரப்பளவில் கொண்டுள்ளது என்பதாகும். இந்த விமான நிலையத்திலிருந்து நகரத்துக்குள் வருவதற்கு டாக்ஸி வசதிகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Mar,Thu
Check Out
13 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri