Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » விதான சௌதா

விதான சௌதா, பெங்களூர்

212

பெங்களூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் விதான சௌதாவாகும். கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான இது செங்கற்களாலும் கருங்கல்லாலும் எழுப்பப் பட்டுள்ள அற்புதமான கலைப்படைப்பாகும். 46 மீட்டர் உயரத்தில் அரண்மனை போன்று காட்சியளிக்கும் இந்த மாளிகைக்கட்டிடம் பெங்களூரில் உயரமான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

 

பாரம்பரிய திராவிடக்கட்டிடக் கலையுடன் நவீன பாணியும் கலந்து எழுப்பப்பட்டுள்ள இந்த அரசாட்சிக்கூடம் பார்ப்பவரை மயக்கும் கலையம்ச இயல்பை கொண்டுள்ளது. எல்லா பக்கங்களிலும் நுழைவதற்கேற்ற இதில் வாயில்கள் உள்ளன.

பொது விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுகிழமைகளிலும் விதான சௌதா பிரகாசமான விளக்குகளால் மாலை நேரத்தில்  ஒளிரச் செய்யப்படுகிறது. மாலை நேரத்தில் 6 மணி 8.30 வரை விதான சௌதாவின் விளக்குகள் எரிகின்றன. விளக்குகள் எரியும்போது விதான சௌதா மிக அழகுடன் காட்சியளிக்கிறது.

பெங்களூர் மாநகரின் மையத்திலிருந்து விதான சௌதா 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கப்பன் பார்க் அருகிலுள்ள இந்த பிரமாண்ட அமைப்பின் முன்புறம் பசுமையான புல்வெளியினை கொண்டுள்ளது. கலையம்சம் கொண்ட படைப்புகளை ரசித்து மகிழும் மனங்கொண்ட படைப்பாளிகளுக்கு இது ரசிக்கக்கூடிய இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri