Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » பெங்களூரு அரண்மனை

பெங்களூரு அரண்மனை, பெங்களூர்

212

பெங்களூரின் மையத்தில் உள்ள அரண்மனைப் பூங்காவில் பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இது இருக்கிறது.  1862ம் ஆன்டு இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரெவரெண்ட் காரட் என்பவரால் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது அப்போதைய ராஜாவான உடையார் வம்சத்தை சேர்ந்த சாமராஜ உடையாரால் 1884ம் ஆண்டு வாங்கப்பட்ட்து. 45,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை கட்டி முடிக்க 82 வருடங்கள் ஆயின.

 

இந்த அரண்மனையின் அழகு மிக பிரசித்தி வாய்ந்தது. அரண்மனை வாசல் வழியாக நுழையும்போதே இது உங்களை பிரமிக்க வைத்து விடும். வேறு எதைப்பற்றியுமே நினைக்க விடாமல் அதன் அழகு உங்களை மெய் மறக்க வைக்கும் இயல்புடையது. சமீபத்தில் இந்த அரண்மனையில் புதுப்பிப்பு வேலைகள் முடிந்துள்ளன.இந்த அரண்மனை உட்புறமானது ஐரோப்பிய ‘தூடர்’ (tudor) பாணி கட்டிடக்கலை முறைப்படி வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு கேம்பிரிட்ஜ் போன்றவற்றில் இது போன்ற கட்டிடக்கலை பாணி அம்சங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த அரண்மனையின் கீழ் தளத்தில் உள்ள திறந்த வெளி முற்றத்தில் நீல நிற பீங்கான் ஓடு பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கல்லால் ஆன இருக்கைகள் அமைந்துள்ளன. இரவில் இந்த நீல நிற பீங்கான் இருக்கைகள் ஒளிர்வது போன்று தோற்றமளிக்கும் அழகு அற்புதமான ஒன்றாகும். மேல் தளத்தில் பிரம்மாண்டமான தர்பார் ஹால் காணப்படுகிறது. ராஜா தன் அவையினருடன் கலந்தாலோசித்த  இடமாக இது அறியப்படுகிறது. அரண்மனையின் உட்புற சுவர்களில் கிரேக்க மற்றும் டச்சு ஓவியங்களும் புகழ் பெற்ற இந்திய ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த தொன்மை வாய்ந்த ஓவியங்கள் அரண்மனையின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed