Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » ஈர்க்கும் இடங்கள் » கமர்ஷியல் தெரு

கமர்ஷியல் தெரு, பெங்களூர்

212

பெங்களூரை சுற்றிப் பார்த்தபின் ஷாப்பிங் செய்யவேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் வரவேண்டிய இடம் இது. கமர்ஷியல் சாலை நெடுக அமைந்துள்ள விளக்கு தூண்கள் காணப்படுகிறது. இவை இரவில் பார்ப்பதற்கு அழகாக ஒளிர்கின்றன. பிரிகேட் ரோடு மற்றும் காமராஜ் சாலை வழியாக இந்த கமர்ஷியல் தெருவை அடையலாம்.

பிரபல பிராண்டுகளின் ஷோரூம்களுடன் உள்ளூர் காலணிகள், ஆடைகள், கலைப்பொருட்கள், பலவிதமான வீட்டுபயோகப்பொருட்கள் போன்றவற்றை விற்கும் கடைகள் இங்கு நிறைந்துள்ளன. பெண்களுக்கான ஆடைகள் அதிக அளவில் பல வகைகளில் இங்கு கிடைக்கின்றன. இங்குள்ள கடைகள் காலை 10.30 அளவில் திறக்கின்றன.பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை இங்கு பயன்படாது என்பதால் கையில் நிறைய பணம் வைத்திருப்பது அவசியம். அசராமல் பேரம் பேசி தடாலடியாக பொருட்களை வாங்க கூடிய ஒரு விதமான நாசூக்கில்லாத மனோநிலைக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்வதும் அவசியம்.

பெரும்பாலும் இந்த ஷாப்பிங் தெருவில் முழுக்க முழுக்க பெண்களின் சாம்ராஜ்யம் என்றாலும் துணைக்கு வரும் ஆண்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க சாலையோர டீக்கடைகள் மற்றும் ரெஸ்டாரெண்டுகள் இங்கு உள்ளன. சுத்தமான அல்லது நவீன உணவு விரும்புவர்களுக்கு கே எஃப் சி மற்றும் பீட்ஸா ஹட் போன்ற உணவகங்களும் இந்த தெருவில் உள்ளன.

ஒரு நாள் முழுக்க இந்த தெருவில் சுற்றி ஷாப்பிங் மற்றும் பேரத்தில் ஈடுபட்டு தெருவோரக்கடைகளிலும் சுவாரஸ்யமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு  பொழுதைக்கழித்து திரும்பும்போது நிச்சயம் உங்களுக்கு களைத்துப் போய்விடும். இருந்தாலும் திரும்பவும் இங்கு வருவதற்கு ஆசைப்படுவீர்கள். அதுதான் இந்த கமர்ஷியல் தெருவின் விசேஷம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue