செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரி பெங்களூரிலிருந்து வட மேற்கில் 18 கி.மீ தொலைவின் அமைந்துள்ளது. நகரின் குடிநீர் தேவைக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. 73.84 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து இந்த ஏரியில் மழை நீர் சேகரமாகும்படி அமைந்துள்ளது. அர்காவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த ஏரியின் கரை 1690 மீட்டர் நீளமும் 40.55 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
பரந்த நீர்ச்சேகரங்களின் அருகில் காணப்படும் வழக்கமான பறவைகளான மீன்கொத்தி, மைனா, பழுப்பு சிட்டுக்குருவி போன்ற அழகான பறவைகளை இந்த ஏரிக்கருகில் பார்க்கலாம். இந்த ஏரியில் பாய்மர சறுக்கு விளையாட்டுகளுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது சுற்றுலா பயணிகளை கவர்ந்த அம்சமாக இருந்திருக்கிறது. ஏரியின் கரையை ஒட்டி மீன்காட்சியகம், தோட்டக்கலை ஆராய்ச்சி பண்ணை, இந்தோ டேனிஷ் கோழிப்பண்ணை மற்றும் கால்நடைப்பண்னை ஆகியவை காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications