புகழ் பெற்ற இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அதி நவீன வளாகம் ஒரு கட்டிடக்கலை அதிசயம் என்பதால் அதுவும் நீங்கள் பெங்களூரில் பார்க்கவேண்டிய இடமாகும். இது ஹோசூர் ரோடில், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அமைந்துள்ளது. 81 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த தகவல் தொழில் நுட்ப வளாகம் கலையம்சமுள்ள கட்டிடங்களை பார்த்து ரசிக்க விரும்புபவர்களை ஈர்க்கின்றது.
கடந்த முப்பது வருடங்களாக பெங்களூர் என்று சொன்னவுடனே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பெயரும் நினைவில் தோன்றும்படியாக இந்த நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்ஃபோசிஸ் வளாகத்தின் சிறப்பம்சம் இங்குள்ள பிரமிடு வடிவில் அமைந்துள்ள பிரமாண்ட கட்டிடமாகும். மேலும் 6000 மரங்களும் மற்றும் செடிகளும் பசுமையுடன் இந்த வளாகத்தில் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications