பெங்களூரின் மையத்தில் அமைந்துள்ள சின்னஸ்வாமி ஸ்டேடியம் 1969 ம் ஆண்டு கட்டப்பட்ட தாகும். குவீன்ஸ் ரோடு மற்றும் கப்பன் பார்க்கிற்கு நடுவில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியம் இந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றாகும்.
1970 – 80 ம் ஆண்டுகளில் கிரிக்கெட் போர்டு தலைவராகவும் KSCA வில் 40 ஆண்டு காலம் அங்கம் வகித்தவரும் ஆன திரு.சின்னஸ்வாமி அவர்களின் நினைவாக இந்த ஸ்டேடியத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியாக 1974 ம் ஆண்டு இந்தியாவுக்கு வெஸ்ட் இண்டீஸுக்கும் இடையேயான் போட்டி நடத்தப்பட்டது. கர்நாடக ரஞ்சி அணிக்கும் தற்காலத்திய பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் இது பிறந்த வீட்டு மைதானம் போன்றது.55,000 பேர் உட்காரும் அளவுக்கு வசதியை கொண்ட இந்த ஸ்டேடியம் இந்திய உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய 1987, 1996 மற்றும் 2011 வருடங்களில் ODI மாட்சுகள் நடத்தப்பட்ட இடமாக இருந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் பல மகத்தான தருணங்களை இந்த ஸ்டேடியம் கண்டுள்ளது.
தற்சமயம் இதை செப்பனிடுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதன் இருக்கை வசதியை 70,000 ஆக உயர்த்துவதற்கு KSCA முடிவு செய்துள்ளது. UB குரூப் அதிபர் திரு விஜய் மல்லையாவின் உரிமையில் உள்ள ஐபில் பெங்களூர் அணியான ‘ராயல் சாலஞ்சர்ஸ்’க்கு இது உள்ளூர் ஸ்டேடியம் என்பதால் தற்சமயம் சில மெருகூட்டும் பணிகள் இந்த ஸ்டேடியத்தில் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications