ஆனந்த் சாஹர் என்றழைக்கப்படும் இந்த செயற்கை ஏரி பன்ஸ்வாரா நகரத்தில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது ‘இதர்’ பகுதியைச்சேர்ந்த லச்சி பாய் எனும் ராணியால் வெட்டுவிக்கப்பட்டுள்ளது.
இவர் மஹரவால் ஜக்மல் என்பவரது ராணியாவார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்களின் சாத்ரிகள் என்றழைக்கப்படும் சமாதி நினைவு மாடங்களும் இந்த ஏரியை ஒட்டி அமைந்துள்ளன.
நினைத்ததை நிறைவேற்றும் சக்திகொன்ட ‘கல்பவிருக்ஷம்’ எனும் மரமும் இந்த ஏரி ஸ்தலத்தில் உள்ளது. பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 3கி.மீ தூரத்திலுள்ள இந்த ஏரிக்கு பேருந்து அல்லது டாக்ஸி மூலம் செல்லலாம்.



Click it and Unblock the Notifications