பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள இந்த அர்துணா எனும் ஸ்தலம் தொல்லியல் அம்சங்களுக்காக சிறப்பான அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்குள்ள ஒரு புராதன வளாகத்தில் 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கலையம்சம் நிறைந்த கோயில்கள் காணப்படுகின்றன.
இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள பல சிறு கோயில்கள் அக்கால இந்தியாவின் செழுமையான நாகரிகத்துக்கான சான்றுகளாக காட்சியளிக்கின்றன. இப்படி புராதனக்கோயில்களை ஏராளமாக கொண்டுள்ளதால் இந்த அர்துணா எனும் இடம் ‘சிதையுண்ட புராதன கோயில்களின் கிராமம்’ என்ற சிறப்புடன் அறியப்படுகிறது.
இந்த இடம் அக்கால பார்மேர் வம்ச அரசர்களின் தலைநகரமாக ஒரு காலத்தில் திகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications