பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலேயே இந்த ஏரி காணப்படுகிறது. இதன் இயற்கை வனப்பு காரணமாக ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக இது புகழ் பெற்று விளங்குகிறது.
முழுக்க தாமரை மலர்களால் நிரம்பியிருப்பதால் இது ரம்மியமான தோற்றத்தை கொண்டுள்ளது. அக்கால மன்னர்களின் கோடை மாளிகையாக விளங்கிய பாதல் மஹால் எனும் அரண்மனையும் இந்த ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கோடையில் பயணிகள் இங்கு படகுச்சவாரி சென்று மகிழலாம்.



Click it and Unblock the Notifications