சிவபெருமானுக்கான இந்த மாடரேஷ்வர் சிவன் கோயில் பன்ஸ்வாரா நகரத்தில் கிழக்குப்பகுதியில் ஒரு மலையின் உச்சியிலுள்ளது. இயற்கையாகவே உருவான ஒரு குகையின் உட்பகுதியில் இந்த கோயில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த குகைக்கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் இந்த அனுபவத்தை அமர்நாத் குகைக்கோயில் தரிசனத்துடன் ஒப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மஹாசிவராத்திரி திருநாளின்போது இந்த சிவன் கோயிலில் ருத்ர அபிஷேக பூஜை செய்விக்கப்படுகிறது.
இங்கிருந்து துவங்கி பானேஷ்வர் கோயில் வரை சென்று முடியும் காவடி யாத்திரை ஒன்றும் இக்கோயிலில் பிரசித்தமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலத்திற்கு டாக்சிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் செல்லலாம்.



Click it and Unblock the Notifications