பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் இந்த தல்வாரா எனும் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள சூரியக்கடவுள் மற்றும் அமாலிய கணேஷ் பஹவான் போன்ற தெய்வங்களுக்காக இந்நகரம் ஆன்மீக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
லட்சுமி நாராயண் கோயில், துவார்கதீஷ் கோயில், மற்றும் சம்பர்நாத் ஜெயின் கோயில் போன்றவையும் இங்குள்ள பிரசித்தமான கோயில்களாகும். பயணிகள் இந்த தல்வாரா நகர சாலைகளில் நடக்கும்போதே இங்கு ‘சொம்புரா’ கலைஞர்கள் கல்லில் அற்புதமான கலைப்படைப்புகளை செதுக்கிக்கொண்டிருப்பதை காணலாம்.



Click it and Unblock the Notifications