பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 19 கி.மீ தூரத்தில் இந்த திரிபுர சுந்தரி கோயில் அமைந்துள்ளது. இது துர்த்தியா மாதா என்றும் அழைக்கப்படும் திரிபுரசுந்தரி தெய்வத்துக்கான கோயிலாகும்.
கருப்பு கல்லால் ஆன இந்த தெய்வத்தின் விக்கிரகத்தை இக்கோயிலில் தரிசிக்கலாம். பழங்குடி கதைகளின்படி, இக்கோயில் குஷாணர் வம்சத்தை சேர்ந்த ஒரு கொடுங்கோல் மன்னனுக்கு முந்தைய ஆட்சியில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ‘ஷக்தி பீடம்’ என்ற பிரசித்தமான அடையாளத்துடன் இக்கோயில் சக்தி உபாசகர்களால் பூஜித்து வணங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications