பரமுல்லா மாவட்டத்தின் அடுத்த முக்கிய நகரம் சோபோர் நகரம் ஆகும். கிபி 880ல் அவந்திவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த நகரம் ஸ்ரீநகருக்கு 48 கிமீ தொலைவில், ஜெலும் நதிக் கரையோரம் அமைந்திருக்கிறது.
மேலும் வட காஷ்மீரின் மிகப் பெரிய வர்த்தக மையமாகவும் இந்த நகரம் விளங்குகிறது. ஆசியாவின் ஆப்பிள் நகரம் என்று செல்லமாக இந்த நகரம் அழைக்கப்படுகிறது. மேலும் சோபோரில் விளையும் ஆப்பிள்கள், ஆசியாவிலேயே மிகச் சிறந்தவைகளாக கருதப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் காஷ்மீரின் லண்டன் என்ற பெயராலும் இந்த சோபோர் நகரம் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நகரில் தோட்டக்கலையும், விவசாயமும் அபரிவிதமாக வளர்ந்து வருகின்றன.
இந்த சோபோர் நகரில் பல அருமையான இஸ்லாமிய மசூதிகள் உள்ளன. குறிப்பாக ஜமியா மசூதி, கான்-கா ஷா-இ-ஹம்டன் மற்றும் பல சிறிய மசூதிகளும் இந்த நகரில் நிறைந்திருக்கின்றன.
மேலும் ஷெய்க் ஹம்சா மக்டூமி துஜார், அர்ஸா சாகிப் டாக்யா கான் ஸைனாகயர், டெய்ட் மவுஜ் முன்ட்ஜி, பாபா ஷுக்குர் டின் வாட்லாப் சோபோர், ஹதி-ஷா சாகிப் போன்ற பிரிசித்தி பெற்ற இஸ்லாமிய புண்ணிய தலங்களும் இந்த நகரில் உள்ளன.
அதோடு இந்து சமயத்தை சேர்ந்த காளி மந்தீர், ஷிவ் மந்தீர், ரிஷி பீர் மந்தீர் மற்றும் பைரோன் மந்தீர் போன்ற புண்ணிய தலங்களும் உள்ளன.



Click it and Unblock the Notifications