பஸ்தி மாவட்டத்தின் தென் மேற்குப்பகுதியில் 10 கி.மீ தூரத்தில் தண்டா சாலையில் இந்த சண்டோ தால் எனும் ஏரி அமைந்துள்ளது. பறவை ஆர்வலர்கள், மீன் பிரியர்கள் மற்றும் பிக்னிக் ரசிகர்கள் ஆகியோருக்கு மிகவும் பிடித்த ஸ்தலமாக இந்த ஏரி அமைந்திருக்கிறது.
குளிர்காலத்தின்போது இந்த இடத்துக்கு ஏராளமான புலம்பெயர் பறவைகள் வருகை தருகின்றன. பலவகை வண்ணங்களில் விதவிதமான கீச்சொலிகளோடு பறவைகள் தரிசனமளிக்கும் இந்த சோலைப்பகுதி பறவை ஆர்வலர்களை பரவசமடையவைக்கும் என்பதில் ஐயமில்லை
சந்தோ தால் ஏரி 5 கி.மீ நீளமும் 4 கி.மீ அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. இதில் பலவகையான மீன்களும் வசிக்கின்றன.
நாட்டுப்புற கதைகளின் இந்த ஏரி ஸ்தலத்தில் முற்காலத்தில் சந்திரா நகர் எனப்பட்ட ஒரு மனித குடியிருப்பு இருந்ததாகவும் பின்னர் காலப்போக்கில் இயற்கை சீரழிவுகளால் அது அழிக்கப்பட்டு இந்த ஏரியாக மாறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஏரியில் மீனவர்கள் ஆபரணங்கள் மற்றும் இதர பொருட்களை அடிக்கடி கண்டெடுப்பது இந்த கதைக்கான நம்பகத்தன்மையை அளிக்கிறது.



Click it and Unblock the Notifications