Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பேலூர் » ஈர்க்கும் இடங்கள் » சென்னக்கேசவா கோயில்

சென்னக்கேசவா கோயில், பேலூர்

16

பேலூரின் பிரதான அம்சம் இந்த சென்னகேசவா கோயில் ஆகும். விஷ்ணுபஹவானின் அவதாரமாகிய சென்னக்கேசவ பெருமாளுக்காக இந்த கோயில் மிகப்பெரிய வளாகத்தில் ஒரு அற்புத கட்டிடக்கலை சின்னமாக எழுப்பப் பட்டிருக்கின்றது.

 

ஹொய்சளர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் நுணுக்கமான கடினமான சிற்ப வடிப்புகளை கொண்ட 48 அலங்காரத்தூண் வடிவங்கள் உள்ளன.

1117ம் ஆண்டில் தலக்காட் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் சோழர்களை வெற்றிகொண்டதன் கீர்த்திச்சின்னமாக இந்தக் கோயிலை மன்னன் விஷ்ணுவர்த்தன் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

மஹாபாரதம், ராமாயணம் போன்ற ஹிந்து காப்பியங்களின் கதைகள் இங்கு சிற்பவடிவில் விளக்கப்பட்டுள்ளன. மதனக்கை மங்கையர் மற்றும் நவரங்க சிற்பங்கள் இங்கு சுவற்றில் வடிக்கப்பட்டுள்ளன.

இது தவிர கோயிலின் உள் வளாகத்தில் பல சிறு கோயில்களும் காணப்படுகின்றன. இந்தக் கோயிலில் பல்விதமான கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அலங்கார வாயில் அமைப்புகள், விதான அலங்காரங்கள், மிருகங்கள் மற்றும் பறவைகளின் சிற்ப வடிப்புகள், அலங்கார நுணுக்கங்கள் போன்றவை இங்கு பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு நிறைந்துள்ளன.

கோயிலின் வாசலில் புஷ்கரணி எனப்படும் படிகளுடன் கூடிய திருக்குளமும் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான வாயிலில் விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில் எழுப்பப்பட்ட கம்பீரமான ராஜ கோபுரம் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் அருகிலேயே கப்பே சென்னிகராயா கோயில் மற்றும் ஒரு லட்சுமி கோயில் போன்றவையும் அமைந்துள்ளன. 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed