குத்ரேமுக் பகுதியில் கங்கமூலா என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகும் இந்த பத்ரா ஆறும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். இந்த ஆறு தக்காண பீடபூமியின் கிழக்குப்பகுதியை கடந்து அதன் துணை ஆறுகளான சோமாவாஹினியை தடபேஹல்லாவிலும், ஹெப்பே ஆற்றை ஒடிராயனஹல்லாவிலும் சந்திக்கின்றது.
லக்கவல்லி அருகில் இந்த பத்ரா ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள அணப்பகுதியில் ஒரு நீர்த்தேக்கம் உருவாகியுள்ளது. அதை அடுத்து இந்த பத்ரா ஆறு ஷிவமோக்காவுக்கு அருகிலுள்ள கூட்லி எனுமிடத்தில் துங்கா ஆற்றுடன் சேர்கிறது.



Click it and Unblock the Notifications