மைத்ரி பாக் எனும் இந்த விலங்குக்காட்சி சாலை மற்றும் பூங்கா வளாகமானது பிலாய் இரும்பு ஆலை நிர்வாகத்தின் மூலம் இரண்டு செயற்கை குளங்களுக்கு அருகே துவங்கப்பட்டுள்ளது.
மைத்ரி பாக் வளாகத்துக்கு அருகிலேயே ‘பிலாய் வாட்டர் ஒர்க்ஸ்’ எனும் குடிநீர் வாரிய அலுவலகமும் அமைந்திருக்கிறது. இது பிலாய் நகரத்துக்கான தூய குடிநீரை வழங்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது.
மைத்ரி பாக் பூங்காவில் உள்ள இசை நீரூற்று ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. இந்த நீரூற்றில் நவீன வண்ண விளக்கு அமைப்புகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
அழகிய மலர்ச்செடிகளை கொண்ட தோட்டங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, இசை நீரூற்று, விளையாட்டு ரயில் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்கா வளாகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
பிரகதி மினார் எனும் காட்சிக்கோபுரம் ஒன்றும் இந்த பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காவின் அழகுக்காட்சிகள் மற்றும் இரும்பு ஆலை போன்றவற்றை இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications