ஃபாரெஸ்ட் பார்க் எனும் இந்த அழகிய பூங்கா புபனேஷ்வர் நகரில் அமைந்துள்ளது. கேபிடல் ஹாஸ்பிடல் எனும் மருத்துவமனைக்கு அருகே இந்த பூங்கா அமைந்துள்ளது. பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் விருப்பத்துடன் இந்த பூங்காவிற்கு விஜயம் செய்து மகிழ்கின்றனர்.
பரந்த விளையாட்டு மைதானங்கள், பெரிய பசுமையான மரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்கள் போன்றவற்றை இந்த பூங்கா கொண்டிருக்கிறது. சுற்றிலும் பசுமைப்போர்வையால் போர்த்தப்பட்டு இந்த பூங்கா காட்சியளிப்பதை கண்களுக்கான விருந்து என்றே சொல்லலாம்.
அதிகாலை நடைப்பயணம் மற்றும் ஓட்டப்பயிற்சிகளுக்கு இந்த பூங்கா வளாகம் மிகவும் ஏற்றது. தூய காற்று மற்றும் அமைதியான சூழல் போன்றவை இங்கு வருகை தரும் பார்வையாளர்களை மகிழ்வூட்டுவதாக உள்ளன. இங்குள்ள பசுமையான புல்வெளிகளில் ஓடி விளையாடுவதை குழந்தைகள் வெகுவாக விரும்புகின்றனர்.



Click it and Unblock the Notifications